அஜித்தை வம்புக்கிழுத்த ப்ளூ சட்டை மாறன் - வெச்சு செய்யும் ரசிகர்கள்

நடிகர் அஜித்குமாரை ப்ளூ சட்டை மாறன் மீண்டும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 26, 2022, 12:47 PM IST
  • அஜித் தற்போது லண்டனில் பைக் ரைடில் இருக்கிறார்
  • ப்ளூ சட்டை மாறன் அஜித்தை விமர்சித்து ட்வீட்
 அஜித்தை வம்புக்கிழுத்த ப்ளூ சட்டை மாறன் - வெச்சு செய்யும் ரசிகர்கள் title=

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் அவரை திரையில் தவிர எதிலும் காண முடியாது. பட ப்ரோமோஷன்களில் கலந்துகொள்ளாத அஜித், எனது தொழில் நடிப்பது என்பதோடு நிறுத்திக்கொள்பவர்.

ஆனால் சமீபத்தில் பைக் ரைடில் அதிதீவிர கவனம் செலுத்து அஜித் நாடு, உலகம் என சுற்றிக்கொண்டிருக்கிறார். ஹைதராபாத்தில் நடந்து வரும் தனது படத்தின் ஷூட்டிங்கில் கேப் கிடைத்துள்ளதால் அவர் தற்போது லண்டனில் இருக்கிறார்.

 

அங்கு அவர் பைக் ஓட்டும் வீடியோவும், காரோடு போஸ் கொடுத்த ஃபோட்டோவும் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதேசமயம் எந்த ப்ரோமோஷனிலும் கலந்துகொள்ளாத அஜித் தற்போது அவரை ப்ரோமோட் செய்துகொள்கிறார். விளம்பரத்தை விரும்பாதவர் என்றால் எப்படி அவரது புகைப்படங்கள் வரிசையாக வெளியாகின்றன எனவும் கேள்வி எழுப்பினர்.

Ajith

இந்நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அஜித் பட ப்ரோமோஷனக்ளுக்கு வரமாட்டார், ஆடியோ லான்ச், பேட்டிகள் என எதிலும் கலந்துகொள்ள மாட்டார். ஆனால் அவரின் புகைப்படம் மற்றும் தினமும் சமூகத்தளங்களில் வெளியாகும். அவருக்கே தெரியாமல் புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார்கள் போல” என பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | விக்ரம் படம் லோகேஷுடையதுதான் ஆனா ஐடியா இந்த இயக்குநரோடது...

இதனைக் கண்ட ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்துவருகின்றனர். அஜித் தற்போது இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 61ஆவது படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே இந்தக் கூட்டணியில் வெளியான வலிமை படம் போதிய வரவேற்பைப் பெறாததால் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது படக்குழு.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News