அடச்சீ.....குளிக்கிறதை எட்டிப்பார்த்த அமுதவாணன்! பிக்பாஸ் கொடுத்த எச்சரிக்கை

பிக்பாஸ் வீட்டில் பெண்கள் குளிப்பதை அமுதவாணன் பாத்ரூமில் எட்டி பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 23, 2022, 10:20 PM IST
அடச்சீ.....குளிக்கிறதை எட்டிப்பார்த்த அமுதவாணன்! பிக்பாஸ் கொடுத்த எச்சரிக்கை title=

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக சென்றிருக்கும் அமுதவாணனின் செயல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. விஜய் டிவியில் வரும் கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளிட்ட அனைத்து காமெடி ஷோக்களிலும் பங்கேற்றிருந்த அமுதவாணன், தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார். ஆரம்பத்தில் இவருடைய ஆட்டம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல கடும் விமர்சனத்தை எதிர் கொண்டு வருகிறார். தனக்கான கோஷ்டி ஒன்றை சேர்த்துக் கொண்டு அவர்களை வைத்து அமுதவாணன் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இப்போது இன்னொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதற்கு அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. அதாவது, பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அமுதவாணன், பாத்ரூம் செல்கிறார். அங்கு இருக்கும் இரண்டு பாத்ரூம்களிலும் பெண் போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதனை தெரிந்து கொண்ட அவர், தன்னுடைய மைக்கை கழற்றிவைத்துவிட்டு ஒரு பாத்ரூமில் யாரோ குளிப்பதை அநாகரீகமாக எட்டிப் பார்க்கிறார்.

உடனே இதனை தெரிந்து கொண்ட பிக்பாஸ், அமுதவாணனை அழைத்து மைக்கை மாட்டுங்க என கட்டளையிடுகிறார். அதன்பிறகே பதற்றமாகி அங்கிருந்து வெளியேறுகிறார் அவர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் போட்டியாளர்கள் குளிப்பதை எட்டிப்பார்த்த அவருக்கு உடனே ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும் படிக்க | வாரிசை வாங்கிவிட்டாரா உதயநிதி?... விஜய்யின் சூப்பர் மூவ்

மேலும் படிக்க | “உன்னை ஒதுக்கியவர்களே தேடி வருவார்கள்” கவனத்தை ஈர்க்கும் “தனித்திரு” குறும்படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News