Bigg Boss Ultimate: பிக்பாஸ் அல்டிமேட்..இவர்தான் முதல் போட்டியாளர்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வருகிற ஜனவரி 30 ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2022, 08:58 AM IST
Bigg Boss Ultimate: பிக்பாஸ் அல்டிமேட்..இவர்தான் முதல் போட்டியாளர் title=

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்ளை நிறைவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கியபோது இருந்த எதிர்ப்பு, ஆண்டுகள் செல்ல செல்ல பலருக்கும் எதிர்பார்ப்பாக மாறியது. நடந்து முடிந்த சீசனில் ராஜூ வெற்றியாளர் ஆனார். 

ஒட்டுமொத்த வீடே தனக்கு எதிராக இருந்தாலும், தான் எடுத்த முடிவில் தைரியமாக நின்று விளையாடிய பாவனி 3வது இடத்தை பிடித்து அசத்தினார். போட்டியின் பாதியில் வந்தாலும், இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசர வைத்தவர் அமீர். இவ்வாறு பல்வேறு சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி (Bigg Boss Tamil) முடிந்தது, பலருக்கும் வருத்தமாக இருந்தது. ஆனால், அந்த வருத்தத்தை போக்கும் வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட் என்ற டைட்டிலில் மீண்டும் களமிறக்கப்பட உள்ளது.

ALSO READ | Bigboss: முன்னாள் டைட்டில் வின்னரை அழைக்காத பிக்பாஸ் டீம்..! ஏன்?

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பாக உள்ள இந்த ஷோவில், கடந்த 5 சீசன்களில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள். 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி முதல் சீசனில் இருந்து சுஜா வருணி, பரணி, ஜூலி, சினேகன் ஆகியோரும், இரண்டாவது சீசனில் இருந்து ஐஸ்வர்யா தத்தா, ஷாரிக், தாடி பாலாஜி ஆகியோரும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதா, ஷெரின் ஆகியோரும், நான்காவது சீசனில் அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும், 5-வது சீசனில் இருந்து சுருதி, நதியா சங் மற்றும் இசைவாணி கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சி வருகிற ஜனவரி 30 ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்த நிலையில் இன்று முதல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கவிஞர் சினேகன் கலந்துக் கொள்ளவிருப்பது உறுதியாகியிருக்கிறது. இது குறித்த அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ALSO  READ | Bigboss Ultimate: மீண்டும் களம்காணும் தாமரை, வனிதா, பரணி? 16 பேர் லிஸ்ட் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News