Bigg Boss Ultimate-ல் இனி சிலம்பாட்டம்: கமலுக்கு பதில் வருகிறார் சிம்பு!!

Bigg Boss Ultimate: லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தின் தேதி சிக்கல்கள் காரணமாக 'பிக் பாஸ் அல்டிமேட்' நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2022, 06:37 PM IST
  • விக்ரம் படப்பிடிப்புக்காக பிக் பாஸ் அல்டிமேடிலிருந்து விலகினார் கமல்.
  • கமலுக்கு பதில் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் ஆவல்.
  • கமல் இடத்தில் சிம்பு வரக்கூடும் என தகவல்.
Bigg Boss Ultimate-ல் இனி சிலம்பாட்டம்: கமலுக்கு பதில் வருகிறார் சிம்பு!! title=

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் அல்டிமேட்' ரியாலிட்டி ஷோ கடந்த சில வாரங்களாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய ஐந்து சீசன்களில் இருந்து புதிய OTT பதிப்பில் பங்கேற்கும் 16 முன்னாள் 'பிக் பாஸ்' போட்டியாளர்களில் இதுவரை நான்கு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தின் தேதி சிக்கல்கள் காரணமாக 'பிக் பாஸ் அல்டிமேட்' நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

புகழ்பெற்ற நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் பற்றி குறிப்பிட்டு பேசிய அவர், இந்த முன்னணி நடிகர்கள் தன்னால் பாதிக்கப்படுவதை தான் விரும்பவில்லை என்று கூறினார். 'பிக் பாஸ் 6'க்கு மீண்டும் வருவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும் படிக்க | 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி! மீண்டும் உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்! 

‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்குப் பதிலாக யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்பது பிக் பாஸ் ரசிகர்கைடையே பெரிய கேள்வியாக இருந்து வந்தது. 

தற்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, நடிகர் சிம்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும், அடுத்த வார இறுதி எபிசோடில் இருந்து அவர் பொறுப்பேற்பார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

வெங்கட் பிரபு இயக்கிய 'மாநாடு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வலுவான மறுபிரவேசம் செய்த சிம்பு, கவுதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் பணிகளை முடித்துள்ளார். கௌதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தலை' மற்றும் கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' ஆகிய படங்களுக்கான படப்பிடிப்பை அவர் மார்ச் முதல் வாரத்தில் துவக்கவுள்ளார். 

சிம்பு தனக்கே உரிய பாணியில் 'பிக் பாஸ் அல்டிமேட்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக கூறப்படும் தகவல் உண்மையானால், கமல் மற்றும் சிம்பு இடையிலான ஒப்பீடுகளும் ரசிகர்களிடையே அமோகமாகப் பரவும். 
எனினும், மனதில் உள்ளதை உள்ளபடி கூறும் இயல்புடைய சிம்பு இந்த நிகழ்ச்சியில் கமலுக்கு ஒரு நல்ல மாற்றாக இருப்பார் என்றே தோன்றுகிறது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகிய கமல்ஹாசன் - அடுத்த தொகுப்பாளர் யார்? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News