லியோவில் ஜக்கம்மா நடிகை... அதுவும் 20 வருடங்களுக்கு பின் விஜய் உடன்...!

Leo Movie Update: லியா படத்தில் ஏற்கெனவே பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், அதில் த்ரிஷா, பிரியா ஆனந்த் மட்டுமின்றி பிரபல நடிகை ஒருவரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 28, 2023, 11:38 AM IST
  • லியோ திரைப்படம் அக். 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
  • படப்பிடிப்பு நிறைவடைந்து ப்ரீ-புரோடக்ஷனில் உள்ளது.
  • லியோ படத்தின் மீது கடும் எதிர்பார்ப்பு உள்ளது.
லியோவில் ஜக்கம்மா நடிகை... அதுவும் 20 வருடங்களுக்கு பின் விஜய் உடன்...! title=

Leo Movie Update: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்தரங்களில் ஒருவரான விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'லியோ'. பீஸ்ட், வாரிசு என அடுத்தடுத்து அவருக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி, சில கலவையான விமர்சனங்களையும் பெற்றன. 

இருப்பினும், அவை வசூல் ரீதியாக வெற்றி பெற்றன எனலாம். எனவே, கடந்த இரண்டு படங்களில் ஏற்பட்ட ஏமாற்றத்தை, லியோவில் மொத்தமாக மறக்கவைத்து, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை குவிக்கும் முனைப்பில் விஜய் மற்றும் படக்குழு இருக்கிறது. அந்த முனைப்பை நீங்கள் அதன் தயாரிப்பிலும், ஒவ்வொரு அப்டேட்டிலும் புரிந்துகொள்ள முடியும். 

பெரும் எதிர்பார்ப்பில் லியோ

அந்த வகையில், இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக லியோ திரைப்படம் உருவெடுத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகும். ஜெயிலர் படத்தின் வெற்றியை அடுத்து, லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான்.

மேலும் படிக்க | வசூல் ராஜாவான ஜெயிலர்.. ரூ.600 கோடியை தாண்டிய கலெக்ஷன்

மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் விஷயங்களை சேர்ந்திருந்த லோகேஷ் லியோ படத்தை முழுமையாக தன் ஸ்டைலில் உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவே படத்தின் மீதான ஹேப்பிற்கு முக்கியமானதாக அமைகிறது. இதைத்தொடர்ந்து படத்தில் நடிக்கும் பெரும் நட்சத்திர பட்டாளங்களும் வெயிட்ங்கிலேயே ரசிகர்களை வெறியேத்தும் அளவிற்கு அமைந்துள்ளது.

கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியா நடித்த த்ரிஷா, சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். அவரை தவிர இந்த திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடித்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

'வாடியம்மா ஜக்கம்மா'

படம் அக். 19ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் களம் இறங்க உள்ள நிலையில், ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லியோ படத்தில் மற்றொரு நடிகையும் நடித்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பல முன்னணி தென் இந்திய படங்களில் நடித்த நடிகை கிரணும், லியோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கெனவே, பல்வேறு நட்சத்திரங்கள் உள்ள லியோவில் கிரணும் நடித்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

ஜெமினி, வில்லன், அன்பே, சிவம், அரசு, வின்னர், தென்னவன், நியூ உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஆம்பள, முத்துன கத்திரிக்காய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். 2003ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் கிரண் 'வாடியம்மா ஜக்கம்மா' பாடலில் நடனம் ஆடியிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. 

மேலும் படிக்க | சமந்தா-விஜய் தேவர் கொண்டா திருமணம்: சமந்தா ஓபன் டாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News