Best South Indian Movies: இந்த 5 தென்னிந்திய படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

Best South Indian Movies:  விஜய்யின் மாஸ்டர் முதல், அல்லு அர்ஜுனின் புஷ்பா வரை சில சூப்பர் ஹிட் தென்னிந்திய படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க.  

Written by - RK Spark | Last Updated : Jan 7, 2024, 08:17 AM IST
  • தென்னிந்திய படங்கள் பிரபலமாகி வருகிறது.
  • பாலிவுட்க்கு சவால் விடும் சில படங்கள்.
  • பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை பெற்றுள்ளது.
Best South Indian Movies: இந்த 5 தென்னிந்திய படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க! title=

பாலிவுட் திரைப்படங்களை தாண்டி சில தென்னிந்தியத் திரைப்படங்கள் சமீப காலமாக மிகப்பெரிய ஹிட் அடித்து வருகின்றன.  தமிழ், தெலுங்கு, மலையாளம் அல்லது கன்னடம் அனைத்து மொழிகளில் இருந்தும் பிளாக் பஸ்டர் படங்கள் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.  இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களுக்கு இந்த படங்கள் சென்றடைந்துள்ளன.  சிறிய ஹீரோ படங்கள் தொடங்கி, பெரிய ஹரோ படங்கள் வரை யாருடைய படமாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் படம் வெற்றி அடைந்துள்ளது.  அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் வெளியான சில பிளாக் பஸ்டர் படங்களை பற்றி பார்ப்போம்.

மேலும் படிக்க | ‘கில்லர் கில்லர்..’ கேப்டன் மில்லர் டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம்!

மாஸ்டர் - Master

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஜெர்மியா ஆகியோர் நடிப்பில் வெளியான ஆக்சன் படம் தான் மாஸ்டர்.  விஜய் ஜேடி எனப்படும் குடிகார கல்லூரி பேராசிரியராக நடித்து இருந்தார்.  சிறார் இல்லத்தில் பவானி என்ற வில்லனை எதிர்த்து குழந்தைகளை காப்பாற்றுகிறார். தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.  அமேசான் பிரைம் வீடியோவில் படத்தை பார்க்கலாம்.

புஷ்பா: தி ரைஸ் - Pushpa: The Rise

திரைக்கதை சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், ராவ் ரமேஷ், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் புஷ்பா.  புஷ்பா ராஜ் என்ற கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடித்து இருந்தார். தினசரி கூலித் தொழிலாளி எப்படி ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் சந்தன கடத்தல்காரராக மாறுகிறார் என்பதே படத்தின் கதை.  புஷ்பா 2: தி ரூல் 15 ஆகஸ்ட் 2024 அன்று வெளிவர திட்டமிடப்பட்டுள்ளது.

ஜெர்சி - Jersey

இயக்குனர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ், விஸ்வந்த் துடும்புடி, சனுஷா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ஜெர்சி. ஒரு விளையாட்டு சம்மந்தப்பட்ட கதையாக ஜெர்சி உருவாகி இருந்தது.  தனது மகனுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாட சென்ற ஒரு அப்பாவின் கதை இது.  இந்த படம் அனைவரது இதயத்தையும் கவர்ந்தது.  

சூப்பர் டீலக்ஸ் - Super Deluxe

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே சேகர் திரைக்கதையில் ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சமந்தா ரூத் பிரபு, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். படம் வெளியான சமயத்தில் சரியாக ஓடவில்லை என்றாலும், ரசிகர்கள் மனதில் தனி இடத்தை இந்த படம் பிடித்தது.  4 தனி தனி கதைகளை ஒன்று சேர்க்கும் விதமாக திரைக்கதை அமைந்து இருக்கும். நெட்பிலிக்ஸில் படத்தை பார்க்கலாம்.

அவனே ஸ்ரீமன்நாராயணா - Avane Srimannarayana

இயக்குனர் சச்சின் பி ரவி இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா, அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான காமெடி படம் அவனே ஸ்ரீமன்நாராயணா. மேற்கத்திய பாணி ஃபேன்டஸி சாகச நகைச்சுவை திரைப்படமாக வெளியாகி இருந்தது. 1980களில் காணாமல் போன புதையலை தேடும் கொள்ளைக்காரத் தலைவரிடம் சிக்கி கொள்ளும் ஒரு ஊழல் போலீஸ் அதிகாரியை சுற்றி கதை நகருகிறது.  அமேசான் பிரைம் வீடியோவில் படத்தை பார்க்கலாம்.

மேலும் படிக்க | அப்படியே அசினை உரித்து வைத்திருக்கும் அவரது மகள்! போட்டோவை பார்த்துள்ளீர்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News