கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் படங்களின் ரிலீஸ் தேதி!

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் மாஸ் ஹீரோக்களின் திரைப்படங்கள் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெளியாகின்றன.    

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 14, 2022, 05:52 PM IST
  • பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.
  • கமலின் விக்ரம் படம் ஜீன் 3ம் தேதி வெளியாக உள்ளது.
  • கார்த்தியின் விருமன் படம் மே மாதம் வெளியாக உள்ளது.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் படங்களின் ரிலீஸ் தேதி! title=

மார்ச் மாதம் வெளியாகும் படங்கள்:

சேத்தன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கன்னட மொழித்திரைப்படம் 'ஜேம்ஸ்'.  மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நடித்துள்ள இந்த படம் மார்ச்-17ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், 'பாகுபலி' மூலம் அதிகளவில் புகழ்பெற்ற இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'.  ராம் சரண் மற்றும் என்.டி.ராமா ராவ் நடித்துள்ள இந்த படம் மார்ச் 25ம் தேதி வெளியாகவுள்ளது.

rrr

மேலும் படிக்க | விக்ரம் கிலிம்ஸியில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

ஏப்ரல் மாதம் வெளியாகும் படங்கள்:

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'பீஸ்ட்'.  ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.  'கேஜிஎப்' முதல் பாகத்தின் தொடர்ச்சியாக 'கேஜிஎப்-2' உருவாக்கப்பட்டுள்ளது.  பிரசாந்த் நீல் இயக்கும் இந்த படத்தில் யாஷ் நடித்திருக்கிறார், இந்த படம் ஏப்ரல்-14ம் தேதி வெளியாகவுள்ளது.  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது.

beast

மே மாதம் வெளியாகும் படங்கள்:

ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'யானை' படம் மே மாதம் 6ம் தேதி வெளியாகவுள்ளது.  இதில் அருண் விஜய் மற்றும் பிரியாபவானி ஷங்கர் நடித்துள்ளனர்.  முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் 'விருமன்'.  இந்த திரைப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது.  சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் டான்.  இந்த திரைப்படம் மே 13ம் தேதி வெளியாகவுள்ளது.  இதே தினத்தில் பரசுராம் இயக்கத்தில், மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படமான சர்க்காரு வாரி பாடா படம் ரிலீசாக உள்ளது.  அடுத்ததாக மே-26ம் தேதி அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' படம் வெளியாகவுள்ளது.

don

ஜூன் மற்றும் செப்டம்பரில் வெளியாகும் படங்கள் :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் ஜூன்-3ம் தேதி வெளியாகவுள்ளது.  மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது.

vikram

மேலும் படிக்க | எப்படி இருக்கு பிரபாஸின் ராதே சியாம்? திரைவிமர்சனம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News