பீஸ்ட் இரண்டாம் சிங்கிள் 'ஜாலியோ ஜிம்கானாவிற்கு' இதுதான் அர்த்தமா?

பீஸ்ட் படத்தின் இரண்டாம் சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடலின் வரிகளை பாடலாசிரியர் கு.கார்த்திக் எழுதியுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 18, 2022, 10:14 AM IST
  • பீஸ்ட் இரண்டாம் பாடல் மார்ச் 19ம் தேதி வெளியாக உள்ளது.
  • இந்த பாடலை விஜய் பாடியுள்ளார்.
  • பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
பீஸ்ட் இரண்டாம் சிங்கிள் 'ஜாலியோ ஜிம்கானாவிற்கு' இதுதான் அர்த்தமா? title=

தற்போது ஏராளமான மக்கள் அதிகம் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் ஒரு படமென்றால் அது பீஸ்ட் படம் தான்.  நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது, இப்படத்தை எப்போது திரையில் காண்போம் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருக்கின்றனர்.  இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.  கடந்த மாதத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

மேலும் படிக்க | விஜய் பாடியிருக்கும் ‘பீஸ்ட்’ செகண்ட் சிங்கிள் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

அரபிக்குத்து எனும் இந்த முதல் சிங்கிளை முழுமையாக கேட்க பலரும் தவம் கிடந்தனர், அதனையடுத்து பிப்ரவரி-14ம் தேதி வெளியான அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வைகளை பெற்று ட்ரெண்டானது.  அன்றிலிருந்து இன்றுவரை பலரின் ப்லேலிஸ்டிலும் அரபிக்குத்து தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.  திரை பிரபலங்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் இப்பாடலுக்கு நடனமாடி இப்பாடலை இன்றுவரை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.  சமூக வலைத்தளங்களை திறந்தாலே அரபிக்குத்து தான் இன்றுவரை ஒலித்து கொண்டிருக்கிறது, இதன் அலையே இன்னும் ஓயாத நிலையில் அடுத்த பேரலையாக இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மீண்டும் மகிழ்ச்சியில் மிதக்க வைத்துள்ளது.

'ஜாலியோ ஜிம்கானா' எனும் இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் குறித்த ப்ரமோ வெளியானது. முதல் சிங்கிளின் ப்ரோமோவை போன்றே இந்த ப்ரோமோவும் அதிகமாக ரீச் ஆனது.  அனிருத் இசையமைப்பில் விஜய் இந்த பாடலை பாடியுள்ளார், நேற்று வெளியான இந்த ப்ரோமோவில் விஜய், நெல்சன், அனிருத், விடிவி கணேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  இப்பாடலுக்கு பாடல் வரிகளை பாடலாசிரியர் கு.கார்த்திக் எழுதியுள்ளார்.  தற்போது ஜாலியோ ஜிம்கானா என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை கு.கார்த்திக் கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், இயக்குனர் நெல்சன் என்னிடம் இப்பாடலை கேட்கும் அனைவரும் அவர்களது கவலையை மறக்கும் அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், அந்த அளவிற்கு பாடல் வரிகளை எழுதுங்கள் என்று கூறினார்.  மேலும் 'ஜாலியோ ஜிம்கானா' என்றால் உங்கள் கவலைகளை விட்டுவிடுங்கள், மகிழ்ச்சியாக இருந்துகொண்டு நல்ல விஷயங்களை பற்றி சிந்தியுங்கள் என்பது தான் அர்த்தம் என்றும் கூறியுள்ளார்.  இந்த பாடல் மார்ச்-19ம் தேதி வெளியாகவுள்ளது, விஜய் குரலில் இப்பாடலை கேட்க ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | ஹெச்.வினோத்தை ஓவர்டேக் செய்யும் விக்னேஷ் சிவன்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News