Avatar 2 OTT: அவதார் 2 ஓடிடி ரிலீஸ்..எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம் இங்கே..!

Avatar 2 OTT Release: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியிருந்த அவதார் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஹிட் அடித்ததை தொடர்ந்து, இப்படம் ஓடிடியிலும் வெளியாகியிருக்கிறது. அது எந்த தளத்தில் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jun 7, 2023, 03:30 PM IST
  • கடந்த ஆண்டு வெளியான படம், அவதார் 2.
  • ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியிருந்தது.
  • ஓடிடியில் வெளியாகிறது.
Avatar 2 OTT: அவதார் 2 ஓடிடி ரிலீஸ்..எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம் இங்கே..! title=

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், அவதார்2. இந்த படத்தில் பாண்டோரா உலகம், மெட்காயினா இன மக்கள், அவர்களின் இடத்தை அபகரிக்க நினைக்கும் மனிதர்கள் என பல அதிசயங்கள் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் வெளியாகியிருந்த இப்படம், பட்டித்தொட்டியெங்கும் பட்டைய கிளப்பி பாக்ஸ் ஆபிசிலும் வெற்றி பெற்றது. தற்போது இப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

ஓடிடியில் வெளியீடு:

இந்தியாவின் பிரபல ஓடிடி தளமான,டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதுகுறித்து முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததன் படி, இன்று இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சந்தா தொகை செலுத்தும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் பயனாளர்களால் மட்டுமே இப்படத்தை பார்க்க முடியும். தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட மொத்தம் 6 மொழிகளில் இப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. 

மேலும் படிக்க | காலா பட க்ளைமேக்ஸில் ரஜினி இறந்தாரா இல்லையா? 5 ஆண்டுகளாகியும் அவிழ்க்க முடியாத மர்மம்..!

173 நாட்களுக்கு பிறகு..

டிசம்பர் 16ஆம் தேதியன்று வெளியான அவதார் தி வே ஆஃப் வாட்டர், சரியாக 173 நாட்களுக்கு ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டாரை போலவே, மேக்ஸ் என்ற ஓடிடி தளத்திலும் அவதார் 2 படம் வெளியாகவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான படங்களில் அதிக நாட்கள் திரையரங்கில் ஓடி, அதிக வசூல் பெற்ற ஒரே படம், அவதார் 2தான். 

வசூல் எவ்வளவு தெரியுமா?

2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் படத்தின் தாெடர்ச்சியாக அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளியானது. சுமார் 13 வருடங்களுக்கு பிறகு இப்படம் வெளியானதால் அவதார் 2 படத்தின் மீது பலருக்கு பலத்த எதிர்பார்ப்புகள் இருந்தது. ஒரு சில ரசிகர்கள் இந்த படத்தின் மீது குறைப்பட்டுக்கொண்டாலும் ஒரு சிலர் படம் நினைத்ததை விட நன்றாகவே இருந்ததாக தெரிவித்திருந்தனர். அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டை கொண்டு உருவாகியிருந்த அவதார் 2 திரைப்படம், வசூலில் 232 கோடியை மிஞ்சியது. 

படக்குழு:

அவதாரின் முதல் பாகத்தில் காடு-காடு சார்ந்த பகுதியில் வாழும் ஒமாட்டிகாயா இன மக்களை காட்டிய ஜேம்ஸ் கேமரூன், இரண்டாம் பாகத்தில் கடல்-கடல் சார்ந்த பகுதியில் வாழும் மெட்காயினா இன மக்களை காண்பித்தார். ஜேக் சல்லி என்று ஹீரோவின் கதாப்பாத்திரத்தில் சேம் வர்திங்டன் என்ற நடிகர் நடத்திருந்தார். இவருக்கு ஜோடியான நட்டேய்ரி கதாப்பாத்திரத்தில் ஜோ சலன்டா நடித்திருந்தார். இவர்களைத்தவிர, டைட்டானிக் நாயகி, கேட் வின்ஸ்லட்டும் இந்த படத்தில் நடித்திருந்தார். 

அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸ்? 

அவதார் படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், அவதார் 2 படம் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றால் அடுத்தடுத்த பாகங்களை இயக்க போவதில்லை என தெரிவித்திருந்தார். அவதார் தி வே ஆஃப் வாட்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றதையாெட்டி, அடுத்தடுத்த பாகங்களை இயக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார், ஜேம்ஸ். அவதார் 3ஆம் பாகம் அடுத்த ஆண்டிலும் (2024) அவதார் 4ஆம் பாகம் 2026ஆம் ஆண்டிலும் அவதார் 5 ஆம் பாகம் 2028ஆம் ஆண்டிலும் வெளியாகும் என படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டைட்டில் கூட தயார் என ஒரு பக்கம் பேச்சு அடிபடுகிறது. ஆனால் இவையெல்லாம் ஹிட் அடிக்குமா என்பது சந்தேகம்தான்..

மேலும் படிக்க | தன்னை பைத்தியம் என்று கலாய்த்த பிரபல இயக்குநருக்கு பார்த்திபன் அளித்த ‘நச்’ பதில்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News