#HBDAsin: நாளை பர்த்டே; கிஃப்ட் இன்று!!

Last Updated : Oct 25, 2017, 10:13 AM IST
#HBDAsin: நாளை பர்த்டே; கிஃப்ட் இன்று!!  title=

நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். இந்த ஜோடிக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது.

மலையாளம், தெலுங்கு திரை உலகில் நடித்த அசின் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004-ம் தேதி தமிழில் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானார். பின் சிவகாசி, போக்கிரி, வரலாறு, கஜினி உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் இவர் சூர்யாவுடன் நடித்த கஜினி படத்தின் இந்தி ரீமேக் படத்திலும் நடித்து இந்தி திரை உலகிலும் பிரபலமானார்.

இந்நிலையில் நடிகை அசின், ராகுல் ஜோடிக்கு இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அசின் மற்றும் ராகுல் ஷர்மாவுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அசின் தனது இன்ஸ்டாகிராமில் "இன்று எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது என அறிவிப்பதில் அளவில்லாத மகிழ்ச்சி. உங்களுடைய வாழ்த்துகளுக்கும் அன்புக்கும் நன்றி. என்னுடைய பிறந்தநாளுக்கு இப்படி ஒரு அழகான பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சி" எனப் பதிவிட்டிருக்கிறார்.

 

 

Trending News