நற்பெயருக்கு களங்கம்! 10 கோடி நஷ்டஈடு கேட்டு ஏஆர் ரகுமான் நோட்டீஸ்!

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஏஆர் ரகுமான் ரூ. 29.50 லட்சம் பணத்தை தங்களிடம் ஏமாற்றிவிட்டதாக நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.  

Written by - RK Spark | Last Updated : Oct 4, 2023, 10:33 AM IST
  • பணத்தை ஏமாற்றிவிட்டதாக ஏஆர் ரகுமானுக்கு நோட்டீஸ்.
  • 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ரகுமான் பதில் நோட்டீஸ்.
  • நோட்டீஸை வாபஸ் பெறவில்லை என்றால் வழக்கு தொடரவும் முடிவு.
நற்பெயருக்கு களங்கம்! 10 கோடி நஷ்டஈடு கேட்டு ஏஆர் ரகுமான் நோட்டீஸ்!  title=

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு, அவர் தரப்பில் பிரபல வழக்கறிஞர் நர்மதா சம்பத் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மாநாட்டிற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஆனால் அரசு அனுமதி வழங்காததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட ரூ. 29.50 லட்சத்தை திரும் கேட்டபோது, முன்தேதியிட்ட காசோலையை ரஹ்மான் வழங்கியும், பணம் இல்லாமல் திரும்பி வந்ததால், ரஹ்மான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு, அது தொடர்பாக வழக்கறிஞர் ஷப்னம் பானு மூலமாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மேலும் படிக்க | லியோ to ரத்தம்- அக்டோபர் மாதம் வெளியாகும் தமிழ் படங்கள்..!

இதுசம்பந்தமாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நர்மதா சம்பத் பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.  அதில், இசைத் துறையில் பல்வேறு விருதுகளை பெற்று மதிப்புமிக்க நபராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் சமூகத்தில் பல தலங்களிலும் பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார் என்றும், 
அவரை பற்றி ASICON 2018 நிகழ்ச்சி நடத்திய இந்திய சர்ஜன் சங்கத்தால் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு அவரது நற்பெயரை கெடுக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். அசிக்கான் அமைப்புடன் ரஹ்மான் எவ்விதத்திலும் தொடர்பிலோ, ஒப்பந்தத்திலோ இல்லாத நிலையில், மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

தனக்கு கொடுத்ததாக கூறப்படும் பணத்தை தான் பெறவில்லை என ரஹ்மான் கூறுவதாகவும், மூன்றாவது நபரிடம் பணத்தை கொடுத்துள்ள இந்திய சர்ஜன் சங்கம் தேவையில்லாமல் ரஹ்மான் பெயரை இதில் ஈடுபடுத்தி உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.  ரஹ்மானுக்கு அனுப்பிய நோட்டீசை 3 நாட்களில் திரும்பப்பெற வேண்டும் என்றும், பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சமூகத்தில் உள்ள நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயை தர வேண்டும் என்றும், தவறினால் சட்ட ரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வழக்கறிஞர் நர்மதா சம்பத் அனுப்பியுள்ள நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பனையூரில் உள்ள மைதானம் ஒன்றில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு 25 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள இடம் இருந்த நிலையில், 40 ஆயிரம் பேர் வரை கூடினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருக்கைகளை மீறி டிக்கெட் விற்பனை செய்ததே அதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. இதுபற்றிய விசாரணை நடைபெற்றும் வருகிறது. இந்த சம்பவத்திற்கும் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சனம் செய்தனர். பின்பு, இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி இயக்குநர் ஹேமந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கோரினார். அதில், ”செப்டம்பர் 10ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியை ஆர்கனைஸ் செய்தது நாங்கள் தான். இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைத்து ரசிகர்களுக்கும் மிக்க நன்றி. நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்துக் கொடுத்த ஏ ஆர் ரகுமானுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  போலியான டிக்கெட், கூட்ட நெரிசல் காரணமாகவே இந்த சம்பவம் நடந்தது. நாங்கள் அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யவில்லை. நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி வர முடியாமல் போன அனைவருக்கும் நாங்கள் பணத்தை திரும்பத் தருகிறோம்” என்று வீடியோ மூலம் தெரிவித்தார்.

மேலும் படிக்க | சந்திரமுகி 2 வசூல் விவரம்: ஒரே நாளில் இத்தனை கோடி கலக்‌ஷனா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News