சம்பளத்துக்கு வரி கட்ட வற்புறுத்தும் நயன்தாரா-அனுஷ்கா

Last Updated : Nov 24, 2016, 02:51 PM IST
சம்பளத்துக்கு வரி கட்ட வற்புறுத்தும் நயன்தாரா-அனுஷ்கா title=

தமிழ், தெலுங்கு பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நயன்தாரா, அனுஷ்கா உள்ளனர். மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் தயாரிப்பாளர்களிடம், சம்பளத்துக்கு வரி கட்டி பணத்தை வெள்ளையாக தரும்படி இருவரும் வற்புறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் இருவரும் வரி சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க தயாரிப்பாளர்களையே வரி செலுத்திவிட்டு, பின்னர் தங்களுக்கான பணத்தை வெள்ளையாக வழங்குமாறு வலியுறுத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ள நிலையில், இந்த நடிகைகள் தங்களுக்கு வழங்கப்படும் பணத்தை வரியை செலுத்திவிட்டு கொடுக்குமாறு தயாரிப்பாளர்களை வலியுறுத்தி வருகிறார்களாம்.

நயன்தாரா, அனுஷ்கா இவர்கள் இருவரும் கோடிகளில் சம்பளம் பெற்று வருகின்றனர். நயன்தாரா தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்த தற்போது அவரது சம்பளத்தை ரூ. 3 கோடிக்கும் மேல் உயர்த்தியுள்ளார். அதேபோல், அனுஷ்காவும் ரூ. 2 கோடிக்கும் மேல் சம்பளம் பெற்று வருவதாக செய்தி வெளியானது.

1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதால் நயன்தாராவும், அனுஷ்காவும் தயாரிப்பாளர்களிடம் சம்பளத்துக்கு வரி கட்டி வெள்ளையாக தரும்படி நிபந்தனை விதித்து இருப்பதாகவும் இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகிள்ளது.

Trending News