WATCH: வெளியானது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் ‘ஐரா’ Teaser....

சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா கலையரசன் கூட்டணி நடிப்பில் உருவான ஐரா படத்தின் டீசர் வெளியானது...

Last Updated : Jan 5, 2019, 05:22 PM IST
WATCH: வெளியானது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் ‘ஐரா’ Teaser....  title=

சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா கலையரசன் கூட்டணி நடிப்பில் உருவான ஐரா படத்தின் டீசர் வெளியானது...

‘இமைக்கா நொடிகள்' படத்துக்கு பிறகு ‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா கைவசம் அஜித்தின் ‘விஸ்வாசம்', சக்ரி டோலட்டியின் ‘கொலையுதிர் காலம்', நிவின் பாலியின் ‘லவ் ஆக்ஷன் டிராமா', சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி', மகேஷ் வெட்டியாரின் ‘கோட்டயம் குர்பானா', அறிவழகன் படம், சர்ஜுனின் ‘ஐரா', சிவகார்த்திகேயன் படம், விஜய் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘ஐரா' நயன்தாராவின் கேரியரில் 63-வது படமாகும். ஹாரர் ஜானரில் உருவாகும் இதனை ‘KJR ஸ்டுடியோஸ்' நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி. ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார். நயன்தாரா டபுள் ஆக்ஷனில் நடிக்கும் இந்த படத்திற்கு ‘8 தோட்டாக்கள்' புகழ் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உட்பட பலர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ஐரா’ இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை நாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கியுள்ள நயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் இரண்டாவது லுக் நேற்று புத்தாண்டை முன்னிட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

Trending News