கமல் - மணிரத்னத்தின் 'KH 234' ஹீரோயின் இவரா?

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு 'KH 234' படத்திற்காக மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களை அதிகபட்சமாக உற்சாகப்படுத்தியுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Dec 31, 2022, 10:53 AM IST
  • கமல் படத்தில் திரிஷா.
  • விஜய், அஜித் படங்களிலும் பேச்சு வார்த்தை.
  • தற்போது ராங்கி படம் வெளியாகி உள்ளது.
கமல் - மணிரத்னத்தின் 'KH 234' ஹீரோயின் இவரா? title=

இந்திய சினிமாவின் மாஸ்டர்களான கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு 'KH 234' படத்திற்காக மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களை அதிகபட்சமாக உற்சாகப்படுத்தியுள்ளது. கோலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படமும், மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' ஆகியவை வணிக ரீதியாக முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கின்றன.  இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெருகியுள்ளது.  

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் காதலியுடன் ரொமான்ஸ் செய்த கதிரவன், மனம் உடைந்த ஷிவின்​

'பொன்னியின் செல்வன் 2' படம் ஏப்ரல் 28, 2023 அன்று வெளியான பிறகு, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் 'KH 234' படம் திரைக்கு வர வாய்ப்புள்ளது. ஷங்கரின் 'இந்தியன் 2' படத்தையும் கமல்ஹாசன் விரைவில் முடிக்கவுள்ளார். இதற்கிடையில் இயக்குனர் எச்.வினோத்துடன் 'KH 233' படத்தில் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  இது குறித்து அதிகாரவப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், மணிரத்தினம் இயக்கும் KH 234 படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் படங்களுக்குப் பிறகு மணிரத்னத்துடன் இது அவரது மூன்றாவது படம் ஆகும். 
திரிஷா கமலுடன் 'மன்மதன் அம்பு' மற்றும் 'தூங்காவனம்' ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படம் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகியுள்ளது. அடுத்ததாக சில பெண்களை மையப்படுத்திய படங்கள் தவிர அஜித்துடன் 'ஏகே 62' மற்றும்  விஜய்யின் 'தளபதி 67' படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க | சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News