சென்னை: பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும், ஜூன் 28ம் தேதி இரவு வித்தியாசாகரின் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என தமிழகம் முழுவதும் பலருக்கு அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
நடிகை மீனாவின் கணவரின் மறைவை நடிகர் சரத்குமார் தனது டிவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியிருக்கிறார்.
It is shocking to hear the news of the untimely demise of Actor Meena's husband Vidyasagar, our family's heartfelt condolences to Meena and the near and dear of her family, may his soul rest in peace pic.twitter.com/VHJ58o1cwP
— R Sarath Kumar (@realsarathkumar) June 28, 2022
நடிகை மீனாவுக்கு இரங்கல் தெரிவித்தும் ஆறுதல் தெரிவித்தும் பலரும் இரங்கல் செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் உடனடியாக இரங்கல் செய்தியை அனுப்பினார். தனது இரங்கல் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்:
தென்னிந்திய திரைப்பட நடிகையும், எனது நெருங்கிய குடும்ப நண்பருமான நடிகை மீனா அவர்களின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்த தகவலறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனா அவர்களும், தம்பதிகளின் மகள் நைனிகாவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும்.
மேலும் படிக்க | 'விக்ரம்' மட்டுமில்ல; சூர்யாவுக்குக் கமல் கொடுத்த 'ரோலக்ஸ்' வாட்ச்சும் புதிய சாதனை
அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலருடன் நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா 2009ம் ஆண்டில் வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார்.அதன் பிறகும் திரைப்படங்களில் நடித்து வந்த மீனாவின் கணவரின் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | கிரிப்டோவில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை; காரணத்தை விளக்கும் பில் கேட்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR