பிக்பாஸில் அடிதடி - நடிகரை தாக்கிய நடிகை

பிக்பாஸில் அடிதடி ஏற்பட்டதை அடுத்து நடிகை போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 11, 2022, 12:56 PM IST
  • பிக்பாஸில் அடிதடி நடந்தது
  • நடிகரை நடிகை தாக்கினார்
  • தாக்கிய நடிகை வெளியேற்றப்பட்டார்
 பிக்பாஸில் அடிதடி - நடிகரை தாக்கிய நடிகை title=

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடந்துவருகிறது. இந்தியைப் பொறுத்தவரை பிக்பாஸ் சீசன் 16 தற்போது நடந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறது. இந்த நிகழ்ச்சியானது எவ்வளவுக்கு எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதோ அதே அளவு சர்ச்சையிலும் சிக்கிவருகிறது. உதாரணமாக 10 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய இயக்குனர் சஜித்கானை பிக்பாஸில் போட்டியாளராக சேர்த்ததற்கு ஆரம்பத்திலேயே பல எதிர்ப்புகள் கிளம்பின. சஜித்தை பிக்பாஸில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி நடிகை மந்தனா கரிமி சினிமாவை விட்டே விலகுவதாக அறிவித்தார். 

அதேபோல் சஜித்கானை பிக்பாஸில் இருந்து நீக்கும்படி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மலிவால் மத்திய மந்திரி அனுராக் தாக்கூருக்கு கடிதமும் எழுதினார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 16 அடுத்தக்கட்ட சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாளொரு பஞ்சாயத்து நடந்து வந்த பிக்பாஸ் வீட்டில் தற்போது அடிதடியே அரங்கேறியுள்ளது. பிக்பாஸ் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நடிகை அர்ச்சனா கௌதமுக்கும், இன்னொரு போட்டியாளரான ஷிவ் தாக்கரே என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது. 

ஷிவ் தாக்கரேவை அர்ச்சனா கௌதம் முகத்தில் கைகளால் குத்தி கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ஷிவ் தாக்கரேவுக்கு காயம் ஏற்பட்டு உடல்நிலையும் சரியில்லாமல் போனது. இதையடுத்து அர்ச்சனா கௌதமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் ஷிவ் தாக்கரே அர்ச்சனா கௌதமிடம் விரும்பத்தகாத முறையில் நடந்துகொண்டதால் அர்ச்சனா தாக்கினார் என ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

மேலும் படிக்க | ஆடை சர்ச்சை...வீடியோவில் பொய் சொன்ன சதீஷ் - பதிலடி கொடுத்த தர்ஷா

மேலும் படிக்க | பிரபல நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 250 சவரன் நகை கொள்ளை... வாட்ச்மேன் உடந்தையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News