திருமணத்திற்கு பிறகும் வேறு நடிகையுடன் உறவில் இருந்த திரை பிரபலங்கள்!

திருமணத்திற்கு பின்னர் வேறொரு நடிகையை திருமணம் செய்துகொண்ட அல்லது வேறொரு நடிகையுடன் உறவில் இருந்தவர்கள் பற்றி காண்போம்.  

Written by - RK Spark | Last Updated : Oct 18, 2022, 08:05 AM IST
திருமணத்திற்கு பிறகும் வேறு நடிகையுடன் உறவில் இருந்த திரை பிரபலங்கள்! title=

உலகநாயகன் கமல்ஹாசன் பல நடிகைகளுடன் உறவில் இருந்துள்ளார், 24 வயதில் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார்.  சரிகாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தில் வாணியை பிரிந்தார், பின்னர் சிம்ரனுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் சரிகாவை பிரிந்தார்.  அதன்பின்னர் சமீபத்தில் கௌதமியுடன் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவருடனும் உறவை முறித்து கொண்டிருக்கிறார்.

kamal

நாகர்ஜுனா 1984ம் ஆண்டு லட்சுமி டகுபதியை திருமணம் செய்துகொண்டார், பின்னர் 1990ம் ஆண்டு இருவரும் உறவை முறித்துக்கொண்டனர்.  அதன்பின்னர் 1992ம் ஆண்டு நாகர்ஜுனா நடிகை அமலாவை திருமணம் செய்துகொண்டார். 

மேலும் படிக்க | ஹன்சிகாவுக்கு டும் டும் டும்... பிரம்மாண்டாமாக தயாராகும் அரச மாளிகை - எப்போது தெரியுமா?

1994ம் ஆண்டு பிரகாஷ் ராஜ் நடிகை லலிதா குமரியை திருமணம் செய்துகொண்டார், திடீரென்று இவர்களது மகனின் இழப்பு இருவரிடையே சில மனக்கசப்புகளை ஏற்படுத்தியது.  அதன்பின்னர் இருவரும் 2009ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர், 2010ம் ஆண்டு பிரகாஷ் ராஜ் போனி வர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

போனி கபூர் திருமணத்திற்கு முன்னரிலிருந்தே நடிகை ஸ்ரீதேவியை காதலித்து வந்தார், 1984ம் ஆண்டு மோனா கபூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  ஸ்ரீதேவி, போனி கபூரால் கர்ப்பமாக இருந்த காரணத்தால் சில காலங்களிலேயே போனிகபூர் - மோனா கபூர் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.  அதன்பின்னர் 1996ம் ஆண்டு போனி கபூர்-ஸ்ரீதேவி திருமணம் செய்துகொண்டனர்.

boney

பிரபுதேவா 1995ம் ஆண்டில் ரம்லத் என்பவரை திருமணம் செய்துகொண்டார், பின்னர் 2010ல் பிரபு தேவா மற்றும் நயன்தாரா இருவரும் உறவில் இருந்து வந்தனர் இதனால் பிரபுதேவா-ரம்லத் விவாகரத்து வரை சென்றனர்.  பிரபுதேவா-நயன்தாரா திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் தங்களது உறவை முறித்துக்கொண்டனர்.

prabhu

மேலும் படிக்க | வெளியானது வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் - ரசிகர்கள் உற்சாகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News