லக்‌ஷ்மி மேனனுடன் காதலா..? திருமண வதந்தி குறித்து முதல் முறையாக வாய் திறந்த விஷால்!

நடிகர் விஷாலுக்கும் பிரபல நடிகை லக்‌ஷ்மி மேனனுக்கும் திருமணம் என்று தகவல் வெளியானதை தொடர்ந்து இது குறித்து நடிகர் விஷால் பேசியுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 11, 2023, 09:21 AM IST
  • நடிகர் விஷாலுக்கும் லக்‌ஷ்மி மேனனுக்கும் திருமணம் என்று தகவல் பரவியது.
  • இது குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
  • இந்த தகவல்கள் வெறும் வதந்தி என அவர் கூறியுள்ளார்.
லக்‌ஷ்மி மேனனுடன் காதலா..? திருமண வதந்தி குறித்து முதல் முறையாக வாய் திறந்த விஷால்! title=

தமிழ் நடிகர் விஷால் நடிகை லக்‌ஷ்மி மேனனை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து நடிகர் விஷால் முதன்முறையாக வாய் திறந்துள்ளார். 

விஷால்-லக்‌ஷ்மி மேனன் திருமண வதந்தி:

விஷால் எந்த படத்தில் நடித்தாலும் அவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகைகளுடன் இவர் காதல் வயப்பட்டுள்ளார் என்பது போன்ற செய்திகள் வெளியாவது வழக்கம். இவர், கேரளாவை சேர்ந்த நடிகையான லக்‌ஷ்மி மேனனுடன் இணைந்து பாண்டிய நாடு மற்றும் நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்தார். அப்போது இவர்கள் காதலித்து வருவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து, விஷால் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து, இவர் சரத்குமாரின் மகளான வரலக்ஷமியை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. அப்போதும் நாங்கள் நண்பர்கள் மட்டுமே என்பதை இருவரும் தெரிவித்தனர். அதன் பிறகு இவர்களது நட்பும் முறிந்து போனது. விஷால், கடந்த 2019ஆம் ஆண்டு அனிஷா என்பவரை திருமணம் செய்ய இருந்தார். நிச்சயதார்த்தம் வரை சென்ற இவர்களது உறவு, கல்யாணத்திற்கு முன்பே முறிந்து விட்டது. இதையடுத்து, மீண்டும் விஷாலுக்கும் லக்‌ஷ்மி மேனனுக்கும் காதல் என தகவல் பரவியது. 

மேலும் படிக்க | கோடி கோடியாய் வசூலை குவிக்கும் ஜெயிலர்..! முதல் நாளே இவ்வளவு கலெக்‌ஷனா..?

விஷால் மறுப்பு:

கடந்த சில தினங்களாக விஷால்-லக்‌ஷ்மி மேனன்தான் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக இருந்தனர். இதையடுத்து, நடிகர் விஷால் இன்று ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கும் லக்‌ஷ்மி மேனனுக்கும் திருமணம் என்று வெளிவந்த செய்திகள் யாவும் உண்மையல்ல என்று கூறியுள்ளார். 

விஷால் தனது பதிவில் கூறியுள்ளதாவது:

“நான் எப்போதும் இது போன்ற வதந்தி மற்றும் சர்ச்சைகள் குறித்து பேசுவதில்லை. அவை பயணற்றது என கருதுபவன் நான். ஆனால், எனக்கும் லக்‌ஷ்மி மேனனுக்கும் திருமணம் என்று பரவும் வதந்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நான் இப்போது கூட இதற்கு பதில் சொல்வதற்கு காரணம், இதில் ஒரு பெண்ணின் வாழ்க்கை அடங்கியுள்ளது. அவரது தனிப்பட்ட வாழ்கைக்குள் புகுந்து அவரது இமேஜை கெடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். நான் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்பதை இப்படி பெர்முடா முக்கோணம் போல ஆராய வேண்டாம். நேரம் வரும் போது என் திருமணம் குறித்து அறிவிக்கிறேன்” என்று விஷால் கூறியுள்ளார். 

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு..

2014ஆம் ஆண்டு வெளியான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இணைந்து நடித்தபோது லக்‌ஷ்மி மேனன்-விஷால் ஆகியோருக்குள் இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து போனது. இந்த படத்தில் ஒரு முத்தக்காட்சி இடம் பெற்றிருந்தது. இதில் இவர்கள் உண்மையாகவே முத்தம் காெடுத்துக்கொண்டதால் இவர்களுக்குள் காதல் மலர்ந்து விட்டதாக ரசிகர்கள் கருதினர். லக்ஷ்மி மேனன் காதல் சர்ச்சைகளுக்கு பிறகு விஷாலுடன் படங்களில் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் என்று தகவல் பரவியதை அடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதை அனைத்தையும் நடிகர் விஷால் தற்போது மறுத்துள்ளார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகும் இவர்களுக்குள் காதல் என்று வதந்தி பரவிக்கொண்டிருப்பது ஏன் என்பது பலருக்கும் புரியவில்லை. 

மேலும் படிக்க | ஓடிடியில் வெளியாகும் இரண்டு சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்..! வீக் எண்டில் எதை பார்க்கலாம்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News