’அரசியல் தலைவர்களை விமர்சிக்கக்கூடாது’ - விஜய் அறிக்கையின் பின்னணி

அரசியல் தலைவர்களை தரக்குறைவாக விமர்சிக்கக்கூடாது என நடிகர் விஜய் கண்டிப்புடன் ரசிகர்களை எச்சரித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 7, 2022, 07:47 AM IST
  • நடிகர் விஜய் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை
  • ரசிகர்கள் பிரதமர் மோடியை அவமதித்ததாக புகார்
  • சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரிக்கை
’அரசியல் தலைவர்களை விமர்சிக்கக்கூடாது’ - விஜய் அறிக்கையின் பின்னணி title=

நடிகர் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் ’பீஸ்ட்’திரைப்படத்தின் டீசரை அண்மையில் சன்பிக்சர்ஸ் வெளியிட்டது. பெரும் வரவேற்பை பெற்ற இந்த டீசரில், காவிக்கலர் துணியை கிழிப்பது போன்றதொரு காட்சி இடம்பெற்றிருந்தது.  இந்தக் காட்சியை எடுத்துக் கொண்ட விஜய் ரசிகர்கள் மற்றும் பாஜக எதிர்பார்ப்பாளர்கள், பாஜகவை எதிர்ப்பதற்காக படத்தில் இடம்பெற்றிருக்கும் குறியீடு என சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிடத் தொடங்கினர்.

மேலும் படிக்க | மோடி முகத்தில் கத்தி : விஜய் ரசிகர்கள் மீது போலீஸில் புகார்

திடீரென பிரதமர் மோடி இருக்கும் காவித்துணியை விஜய் கிழிப்பது போன்ற புகைப்படமும் சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய பா.ஜ.க ஆதரவாளர்கள், விஜய் ரசிகர்கள் இவ்வாறு செய்வது அரசியல் நாகரீகமல்ல. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்படும் என அறிவித்தனர். சினிமா தயாரிப்பாளரும், பாஜகவைச் சேர்ந்தவருமான ஜே.எஸ்.கே கோபி, டிவிட்டரில் இது குறித்து கண்டனத்தை பதிவு செய்தார். விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

’மோடி முகத்தில் கத்தி : விஜய் ரசிகர்கள் மீது போலீஸில் புகார்’ என்ற தலைப்பில் இந்த செய்தி ஜீ நியூஸ் தமிழ் வலைதளத்திலும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், விஜய் தரப்பில் இருப்பது புஸ்ஸி ஆனந்த் விளக்கம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசியல் தலைவர்களை, அரசுப் பதவிகளில் உள்ளவர்களை யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கைகள், இணையதளங்கள் மற்றும் மீம்ஸ் வடிவில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் ஏற்கனவே அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறு செயல்பட்டவர்களை இயக்கத்தை விட்டு நீக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

மேலும் படிக்க | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இளைய தளபதி நடிகர் விஜய் நேருக்கு நேர் சந்திப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News