அம்மாவுக்காக கோயில் கட்டினாரா விஜய்? அதுவும் இவ்வளவு பெருசாவா!

Vijay Built Sai Baba Temple For Shoba : நடிகர் விஜய், தனது அம்மாவிற்காக ஒரு கோயிலை கட்டிக்காெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Apr 9, 2024, 05:46 PM IST
  • தாய்க்காக கோயில் கட்டிய விஜய்?
  • அதுவும் இவ்வளவு பெரிய கிரவுண்டிலா?
  • இது குறித்த முழு விவரம், இதோ!
அம்மாவுக்காக கோயில் கட்டினாரா விஜய்? அதுவும் இவ்வளவு பெருசாவா! title=

Vijay Built Sai Baba Temple For Shoba : தமிழ் திரையுலகில் தற்போது டாப் ஹீரோக்களுள் ஒருவராக இருப்பவர், நடிகர் விஜய். தற்போது GOAT படத்தில் நடித்து வரும் இவர், தனது தாயக்காக ஒரு கோயிலை கட்டிக்கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சாய் பாபா கோயிலில் விஜய்..

நடிகர் விஜய், அடிப்படையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றாலும், அனைத்து மதங்களையும் ஒரே பார்வையில் பார்ப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் பெரிதாக கோயிலுக்கு செல்லும் ஆள் போலவோ, எந்த மதத்தையும் போற்றும் ஆளாகவோ இருக்க மாட்டார். ஆனால், தற்போது அவர் ஒரு சாய் பாபா கோயிலில் அந்த காேயிலில் இருப்பவர்களுடன் பாேஸ் கொடுக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் குறித்து வைரலாகும் எந்த விஷயத்தையும் பெரிய செய்தியாக்கும் ரசிகர்கள், இதற்கு பின்னாலும் ஒரு கதை இருப்பதாக கூறி வருகின்றனர். 

தாய்க்காக கோயில் கட்டினாரா விஜய்?

நடிகர் விஜய்யின் தாய் ஷோபாவிற்கு சாய் பாபா மீது அதீத நம்பிக்கை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தனது அம்மாவிற்காக சென்னை அம்பத்தூர் நகராட்சியில் இருக்கும் கொரட்டூரில் சாய் பாபா கோயிலை கட்டிக்கொடுத்திருக்கிறாராம். இந்த கோயில், 8 கிரவுண்ட் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கும்பாபிஷேகம் முடிந்தது..

விஜய் தற்போது கட்டிக்கொடுத்ததாக கூறப்படும் சாய் பாபா கோயிலின் கும்பாபிஷேகம், பிப்ரவரி 11ஆம் தேதியே முடிந்து விட்டதாம். இந்த கும்பாபிஷேக விழாவில் நடிகர் விஜய், புஸ்ஸி ஆனந்த், விஜய்யின் தாய் ஷோபா உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. விஜய்க்கு சொந்தமாக இருக்கும் உதயம் தியேட்டருக்கு அருகில்தான் இந்த கோயில் கட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | தங்கள் திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி தனுஷ்-ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனு!

லாரன்ஸின் வழியில்..

நடிகர் லாரன்ஸ், சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது தாயக்காக ஒரு கோயிலை கட்டினார். இதை கட்டும் போது, தனது தாய் மட்டுமன்றி குழந்தைகளுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்த அனைத்து தாய்மார்களுக்கும் இந்த கோயிலை சமர்பிப்பதாக கூறியிருந்தார். தற்போது விஜய் செய்துள்ளதாக கூறப்படும் காரியமும், இதனுடன் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டு வருகிறது. 

GOAT படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் விஜய்..

வெங்கட் பிரபுவுடன் முதன் முறையாக GOAT படம் மூலம் கைக்கோர்த்துள்ள விஜய், தற்போது அதன் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். சென்னையில் நடைப்பெற்ற இப்படத்தின் ஷூட்டிங், பின்பு வெளிநாட்டிலும் நடைப்பெற்றது. இதையடுத்து சமீபத்தில் விஜய் கேரளாவிற்கு சென்றார். அங்கு அவருக்கு தாறுமாறாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்படம், இந்த வருடத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 69 இயக்குநர் யார்?

தளபதி 69 படத்தின் இயக்குநருக்கான தேடுதல் வேட்டையில் தற்போது விஜய் இறங்கியிருக்கிறார். பிரபல இயக்குநர் ஹெச்.வினோத், இந்த படத்திற்கு இயக்குநராக ஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | Prasanth : நடிகர் பிரசாந்திற்கு 2வது திருமணமா? மணப்பெண் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News