மாற்றி பேசவில்லை, மாற்றுவதற்காக பேசுகிறேன் -இது STR பன்ச்!

தனது கட் அவுட்டிற்கு அண்டாவில் பால் ஊற்றுங்கள் என சிம்பு கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தான் ஏன் அவ்வாறு கூறினேன் என விளக்கம் அளித்துள்ளார்!

Last Updated : Jan 28, 2019, 05:28 PM IST
மாற்றி பேசவில்லை, மாற்றுவதற்காக பேசுகிறேன் -இது STR பன்ச்! title=

தனது கட் அவுட்டிற்கு அண்டாவில் பால் ஊற்றுங்கள் என சிம்பு கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தான் ஏன் அவ்வாறு கூறினேன் என விளக்கம் அளித்துள்ளார்!

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 1-ஆம் நாள் திரைக்கு வருவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிம்பு தனது ரசிகர்களிடம் 'இந்த படத்தின் வெளியீட்டின் போது கட்அவுட், பேனர் வைக்காதீர்கள். அந்தப் பணத்தில் உங்களுடைய குடும்பத்தினருக்கு உடைகள், இனிப்புகள் வாங்கிக் கொடுங்கள். அதை வீடியோவாக எடுத்து வெளியிடுங்கள்' என வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் ஒரு வாரம் கழித்து, 'என் கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள்' என முந்தைய கருத்துக்கு மாறாய் மாற்று கருத்து தெரிவித்தார். இந்த இரண்டு வீடியோக்களும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல், ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியது.

இந்நிலையில் இன்று இந்த வீடியோக்கள் குறித்த விளக்கத்தினை சிம்பு செய்தியாளர்களிடம் தெரியபடுத்தியுள்ளார். 

சில மாதங்களுக்கு முன்னர் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த மதன் என்ற சிம்பு ரசிகர் ஒருவர் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு சிம்பு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் படம் அப்போது வைரல் ஆனது. பேனர் தகராறில் இறந்த ரசிகரின் வீட்டுக்கு இன்று சென்ற சிம்பு அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியதோடு ஆடைகளையும் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தனது வீடியோ குறித்த விளக்கத்தினை அளித்துள்ளார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது... ‘கட்அவுட் வைக்கும்போது ஏற்பட்ட பிரச்சினையால் என் ரசிகர் பலியானதால் நான் வேதனையில் இருந்தேன். அதனால் தான் பால் அபிஷேகம் வேண்டாம் என்று தெரிவித்தேன். ஆனால் அது எல்லோரையும் சென்று சேரவில்லை. சிலர் விமர்சித்ததற்கு பதிலடியாக எதிர்மறையாக சில வி‌ஷயங்கள் கூறினேன். அது எல்லோரையும் சென்று சேர்ந்து சர்ச்சையாகிவிட்டது.

நான் இப்போதும் அதையே தான் கூறுகிறேன்... "பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று நான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப் பட்டுவிட்டது. இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன். எனது படம் பார்க்க வருபவர்களுக்கு அண்டாவில் பால் காய்ச்சி ஊற்றுங்கள் என்றுதான் சொன்னேன். நான் மாற்றி பேசவில்லை. எல்லோரையும் மாற்றுவதற்காக பேசுகிறேன். அண்டா நிறைய பால் ஊற்றுங்கள், ஆனால் வாய் இல்லாத கட் அவுட்டிற்கு ஊற்றுவதற்கு பதிலாக படம் பார்க்க வரும் வாய் உள்ள மனிதர்களுக்கு ஊற்றிக் கொடுங்கள்." என தெரிவித்தார்.

Trending News