சிம்பு ரசிகர்களுக்கு ஒரு புதிய அதிர்ச்சி!

Last Updated : Aug 15, 2017, 09:10 AM IST
சிம்பு ரசிகர்களுக்கு ஒரு புதிய அதிர்ச்சி! title=

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. பெண் ரசிகைகளே இவருக்கு அதிகம் என்னும் அளவுக்கு திறமை கொண்டவர். 

எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதனால் துவண்டுவிடாத சிம்பு, சமீபத்தில் அவரது அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்புகளை தெரிவித்து வந்தார். 

இந்நிலையில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களில் இருந்து தான் வெளியேறுவதாக சிம்பு அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் இறுதியாக குறிப்பிட்டிருந்த விளக்கம் வருவதாவது, 

"எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தைதான் எனது வலிமையே. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் நேர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் ஒரு பங்கு வகிக்க எனக்கு பயமாக இருக்கிறது. ஒரு நட்சத்திரத்திற்கு சமூக ஊடகம் அவசியம் தான். ஆனால் நான் என் மனம் சொல்வதைர கேட்கிறேன். நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இதுதான், எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள்" #HappyIndependenceDay

இவ்வாறு கூறியிருக்கிறார். 

Trending News