அயோத்தி…அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்: ரஜினிகாந்த் பாராட்டு

அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படத்தை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 11, 2023, 12:05 PM IST
  • ‘அயோத்தி’ திரைப்படத்தை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்.
  • கடந்த மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
  • கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
அயோத்தி…அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்: ரஜினிகாந்த் பாராட்டு title=

அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் அயோத்தி. இதில் சசிகுமார் ஜோடியாக பிரியா அஸ்ரானி நடித்திருந்தார். மேலும் குக் வித் கோமாளி புகழ், யஷ்பால் ஷர்மா மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். மேலும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

அயோத்தி படமும் இதில் மிகவும் வித்தியாசமான கதைகளம் தான். அதாவது ஊரு விட்டு ஊரு வந்தா ஒரு குடும்பத்தில் பெண் ஒருவர் இறந்து போன நிலையில் அவரது குடும்பத்தின் விருப்பப்படி பல சிரமங்களுக்கு உட்பட்டு அவர்களுடைய சொந்த ஊருக்கு உடலை அனுப்பி வைப்பது தான் அயோத்தி படத்தின் கதை.

மேலும் படிக்க | விஜய்யின் லியோ படத்தில் தனுஷ்? வெளியானது உண்மை!

சமீபத்தில் இந்த படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகியது. திரையரங்குகளில் சென்று பார்க்காதவர்கள் இப்போது வீட்டிலிருந்து இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் சரியான பதிலடி கொடுக்கும் படியாக அயோத்தி படம் அமைந்திருந்தது. மேலும் சசிக்குமாருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படத்தை ஆஹா..ஓஹோ.. என்று பாராட்டியுள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது.,

" அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படம் கூடிய விரைவில் இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இனி வேற ரகம்! தனுஷ் நடிக்கும் அடுத்த 7 படங்களின் அப்டேட் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News