கவர்ச்சியான கருப்பு சேலையில் கவரும் நடிகை மோனாலிசா போட்டோ

தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் சிவப்பு கீற்றுகள் கொண்ட கருப்பு நிற சேலையுடன் பகிர்ந்த படங்கள் மிகவும் வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 11, 2019, 04:48 PM IST
கவர்ச்சியான கருப்பு சேலையில் கவரும் நடிகை மோனாலிசா போட்டோ title=

போஜ்புரி (Bhojpuri) நடிகையும், நஜர் (Nazar) தொலைக்காட்சி தொடர் மூலம் புகழடைந்த மோனலிசா அகா அன்டாரா பிஸ்வாஸ் (Monalisa Aka Antara Biswas), தற்போது ஒரு விளம்பர படப்பிடிப்பில் உள்ளார். அவர் தனது ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் சிவப்பு கீற்றுகள் கொண்ட கருப்பு நிற சேலை அணிந்திருப்பதைக் காணக்கூடிய படங்களை வரிசையாகா பகிர்ந்துள்ளார். வளையல்கள், ஒரு ஜோடி வெள்ளி காதணிகள், அழகு கண்கள், நுட்பமான ஒப்பனை மற்றும் உதட்டுச்சாயம் என தனது புகைப்படத்தில் அழகு காட்டும் தோற்றத்தை பகிந்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் அவள் தலைமுடியை தளர்வான சுருட்டைகளாக வடிவமைத்து உள்ளாள். பேக்லெஸ் ரவிக்கைகளில் தனது கவர்ச்சியை மீண்டும் காட்டி, அபூரணம் அழகு வெளிப்படுத்தி உள்ளார்.

முன்னதாக, அவர் தனது சிறந்த நண்பரான மைத்துனரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில், அவர் பச்சை நிற லெஹங்காவுடன் இணைந்த ஒரு பழுப்பு நிற ரவிக்கை அணிந்திருப்பதைக் காணலாம்.

 

சமீபத்தில், நஜர் தொடர் ‘எதிர்மறை பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான’ ஸ்டார்டஸ்ட் விருதை (Stardust Award) பெற்றுள்ளார். அப்பொழுது தனது திரைப் பயணத்தை பற்றி பேசுகையில், “2016, நான் இந்திய தொலைக்காட்சியில் நுழைந்த ஆண்டு… திரைத்துறையின் கலவையான உணர்வுகளை பார்த்த போது,, உற்சாகம், பதட்டம் மற்றும் எனது எதிர்காலம் என்னவாகும் என்று ஒரு பயம் வந்தது. மிகவும் பிரபலமான இரண்டு ரியாலிட்டி ஷோக்களில் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு, நான் கிட்டத்தட்ட ஒரு வருடம் எந்த வேலையும் இல்லாமல் இருந்தேன். அந்த நாட்கள் எவ்வாறு கடந்தன என்பது எனக்குத் தெரியும் எனக் கூறினார்.

 

அன்டாரா பிஸ்வாஸ் (பிறப்பு: நவம்பர் 21, 1982), அவரது திரைப் பெயரான "மோனாலிசா" மூலம் நன்கு அறியப்படும் ஒரு இந்திய நடிகை. அவர் 125-க்கும் மேற்பட்ட போஜ்புரி படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்தி, பெங்காலி, ஒடியா, தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அவர் 2016 இல் இந்திய நிகழ்ச்சியான பிக் பாஸ் 10 (Big Boss 10) இன் போட்டியாளராக இருந்தார். அவர் தற்போது ஸ்டார் பிளஸ் நாசரில் மோகனா என்ற எதிர்மறை வேடத்தில் நடித்து வருகிறார். இந்த கதாபத்திரம் மூலம் அவர் அதிக பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

 

இவர் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான "சிலம்பாட்டம்" படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், வைத்தியர், கடலுகு மரணமில்லை, என் பேயர் குமாரசாமி போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

 

Trending News