100 கோடி 200 கோடிலாம் வேணாம்; ஸ்ட்ரைட்டா 400 கோடிதான்! வெறித்தன வசூலில் விக்ரம்!

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் 10 நாட்களில் ஒட்டுமொத்தமாக வசூலித்த தொகை விபரம் வெளியாகியுள்ளது.  

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 13, 2022, 07:21 PM IST
  • கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் தொடர்ந்து வசூல் குவிப்பு.
  • 10 நாட்களில் விக்ரம் வசூலித்த தொகை விபரம் வெளியானது.
  • 300 கோடி ரூபாய் வசூல் படங்களில் இணைந்தது விக்ரம்.
100 கோடி 200 கோடிலாம் வேணாம்; ஸ்ட்ரைட்டா 400 கோடிதான்! வெறித்தன வசூலில் விக்ரம்! title=

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் பான் இந்தியா வெளியீடாக ரிலீஸ் ஆனது.

உலகம் முழுவதும் நல்ல வசூலைக் குவித்துவருகிறது. வெளியான நாளில் இருந்து தென் இந்திய மொழிகளில் நல்ல வசூலைக் குவித்த விக்ரம் வெளிநாடுகளிலும் பிரம்மாண்ட வசூலை ஈட்டியது. இந்தி ஏரியாவில் மட்டும் வசூலில் சற்று சறுக்கல் உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் 2 வாரத்திலிருந்து இந்தியிலும் வசூல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கமலின் கரியரில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் எனும் பெருமையை சில நாட்களுக்கு முன் விக்ரம் பெற்றது. இந்நிலையில் புதிய சாதனை ஒன்றை இப்படம் படைத்துள்ளது. அதாவது ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் தற்போது ஒட்டுமொத்தமாக சுமார் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம்.

மேலும் படிக்க | மாஸ் காட்டும் கமல்ஹாசன்..! விஜய்யின் ‘வசூல்’ இடம் பறிபோகிறதா? ஓர் அலசல்!

 

இதனால் 300 கோடி ரூபாய் வசூல் செய்த கமலின் முதல் படம் எனும் சிறப்பை இப்படம் பெற்றுள்ளது. விக்ரமைப் பொறுத்தவரை மூன்றாவது வாரத்தை படம் நெருங்கியுள்ளபோதும் மக்கள் மத்தியில் இன்னும் ட்ரெண்டிங்கில்தான் உள்ளது.

இதனால் இன்னும் 10 நாட்களுக்கும்கூட விக்ரம் படம் நல்ல கலெக்‌ஷன் குவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கமலின் சுமார் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்தாலும் ஆச்சர்யமில்லை என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | Troll செய்யப்படும் இயக்குநர் நெல்சன்: லோகேஷ் கனகராஜ் சொல்வது என்ன?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News