1994ம் ஆண்டு வெளியான பாரஸ்ட் கம்ப் என்ற படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் லால் சிங் சத்தா. அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான், கரீனா கப்பூர், நாக சைதன்யா போன்றோர் நடித்துள்ளனர். வியாட்காம் நிறுவனமும், அமீர்கானும் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளனர். சிறுவயதில் இருந்தே மன நலம் குன்றியவராக ஹீரோ அமீர்கான் இருந்து வருகிறார். அவரை அவரது தாயார் மிகவும் பத்திரமாக பார்த்து வருகிறார். சரியாக நடக்க முடியாமல் இருக்கும் அமீர் கானுக்கு ஒரு கட்டத்தில் நடக்க வருகிறது. பல ஆண்டுகளுக்கு கழித்து ஒரு ரயில் பயணத்தில் சக பயணிகளிடம் தன்னுடைய வாழ்க்கையை பற்றி சொல்கிறார் லால் சிங். அதில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களே லான்சிங் சத்தா படத்தின் கதையாகும்.
இந்த படத்தில் அமீர்கான் லால் சிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று சொல்வதற்கு பதிலாக வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம். தன்னுடைய நடிப்பால் வேறு எதையும் யோசிக்க முடியாத அளவிற்கு கட்டிப்போடுகிறார் அமீர்கான். அவரது நண்பராக, காதலியாக கரீனா கபூர் நடித்துள்ளார். அவர் மீது கோபம் வரும் அளவிற்கு கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக நடித்துள்ளார். பிளாஷ்பேக்கில் அமீர்கானின் நண்பராக வரும் நாக சைதன்யா தனது வித்தியாசமான நடிப்பால் ரசிக்க வைத்துள்ளார். குறிப்பாக அமீர்கான் மற்றும் நாகச் செய்தியா உரையாடலில் வரும் பனியன், ஜட்டி வசனங்கள் வரும் இடமெல்லாம் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்!
நடக்க முடியாமல் திணறிய நிலையில் இருந்து ஓட்டப்பந்தயங்களில் ஓடி வெற்றி பெறும் காட்சிகள் சிறப்பாக உள்ளது. குறிப்பாக இடைவெளிக்கு முன்னால் வரும் போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு போர்சனுக்காகவே இயக்குனரை தனியாக பாராட்டலாம். அவ்வளவு தத்துவமாக அந்த காட்சி முழுவதும் எடுக்கப்பட்டிருந்தது. படம் முழுக்க இந்தியாவில் நடந்த முக்கியமான சம்பவங்களை ஆங்காங்கே காட்சிப்படுத்துகின்றனர். அந்த சம்பவங்களினால் கதையின் போக்கும் மாறுகிறது. எமர்ஜென்சி, பாபர் மசூதி இடிப்பு, இந்தியா 1983 உலக கோப்பையை வென்றது, அண்ணா ஹசாரே உண்ணாவிரத போராட்டங்கள், மும்பை குண்டுவெடிப்பு, கார்கில் போர் போன்றவை லால் சிங் படத்தில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் திணிக்கப்படாமல் கதையின் போக்கில் செல்வது பாராட்டுக்குரியது.
மனநலம் குன்றியவராக படம் முழுக்க அவ்வளவு எதார்த்தமாகவும் தத்ரூபமாகவும் அமீர்கான் நடித்துள்ளார். அவரது நடிப்பு படத்திற்கு எந்த அளவுக்கு பலமாக உள்ளதோ அதே அளவிற்கு பலவீனமாகவும் உள்ளது. அதேபோல் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்களும், மிகப்பெரிய ஓட்டையும் உள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதி இந்தியாவின் மிகப்பெரிய பத்திரிகையின் அட்டை படத்தில் இடம்பெற்றும் அவரை யாருக்கும் அடையாமல் தெரியாமல் இருப்பது, மன நலம் குன்றியவரை போருக்கு அனுப்புவது, அமீர்கான் நடத்திய கம்பெனி என்ன ஆனது போன்ற பல கேள்விகள் படம் முடிந்து வெளியே வரும் பொழுது நமக்கு எழுகிறது.
தனக்கு தேவையானதை அடைய நினைத்து அதன் மூலம் மிகப் பெரிய கஷ்டங்களை அனுபவித்து பிறகு திருந்தி அமீர் கானுடன் வந்து இணையும் கரீனா கபூர் நடிப்பில் அசத்தியுள்ளார். டீ ஏஜிங் டெக்னாலஜி இந்த படத்தில் சிறப்பாகவே பயன்படுத்தியுள்ளனர். சிறுவயது கதாபாத்திரங்களாக வரும் அமீர்கான் மற்றும் கரீனா கபூர் காட்சிகள் பிரமாதமாக உள்ளது. ஒரே ஒரு காட்சியில் இடம்பெறும் சாருக்கானிற்கு கைத்தட்டலில் திரையரங்கமே அதிர்கிறது. பாரஸ்ட் கம்ப் படத்தை அப்படியே எடுக்காமல் பல மாற்றங்களை செய்து எடுத்துள்ளனர். முதல் பாதி இருந்த அளவிற்கு இரண்டாம் பாதி இல்லாதது இந்த படத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது, படத்தின் நீளமும் மிகப்பெரிய பிரச்சினை. பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறை சொல்லும் அளவிற்கு இல்லாமல் உள்ளது. லால் சிங் படம் பழைய நினைவுகளை திரும்ப தூண்டும் ஒரு இந்திய சுற்றுலா.
மேலும் படிக்க | கேட்டதோ 'கைதி-2' அப்டேட்! கிடைத்ததோ தளபதி 67! உற்சாகத்தில் ரசிகர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ