9 ஆண்டுகளுக்கு பின்னர் யுவன் - தனுஷ் கூட்டணி?

Last Updated : Oct 11, 2017, 08:50 AM IST
9 ஆண்டுகளுக்கு பின்னர் யுவன் - தனுஷ் கூட்டணி? title=

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஹிட் படம் மாரி. இதையடுத்து, இப்படத்தின் 2-ம் பாகம் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக கிருஷ்ணா நடிக்க, முக்கிய தோற்றத்தில் ரோபோ சங்கர் நடிக்கிறார்.
 இந்தப் படத்துக்கு இசை அமைப்பது யார் என்ற கேள்வி நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.  முதல் பாகத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்து இருந்தார்.

தற்போது அனிருத்தும், தனுஷும் பேசிக் கொள்வதில்லை என்பதால் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 9 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘யாரடி நீ மோகினி’ படம் தான் இருவரும் கடைசியாக இணைந்த படம். எனவே, மறுபடியும் இருவரும் இணையலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

Trending News