டிசம்பர்-10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 6 புதிய படங்கள்!

பொதுவாகவே டிசம்பர் மாதங்களில் பல திரைப்படங்கள் வரிசையாக வெளியாகும்.  அந்த வகையில் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் 6 புதிய படங்கள் வெளியாக உள்ளன.    

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 6, 2021, 01:14 PM IST
டிசம்பர்-10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 6 புதிய படங்கள்! title=

பொதுவாகவே டிசம்பர் மாதங்களில் பல திரைப்படங்கள் வரிசையாக வெளியாகும்.  அந்த வகையில் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் 6 புதிய படங்கள் வெளியாக உள்ளன.  

ஜெயில் (JAIL) :

வசந்தபாலன் இயக்கத்தில் G.V.பிரகாஷ் இயக்கத்தில் உருவான ஆக்ஷன் திரைப்படம் தான் 'ஜெயில்'.   இப்படத்தில் அபர்ணதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, பிரபாகர், ரோபோ சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீசாக இருக்கிறது.  இப்படத்திற்கு G.V.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு டிசம்பர் மாதம் 10-ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

jail

தேள் :

ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படம் தான் 'தேள்'.  இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.  கடந்த மாதம் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 10-ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

முருங்கைக்காய் சிப்ஸ் (MURUNGAKAI CHIPS) :

ஸ்ரீஜார் இயக்கதில் சந்தனு பாக்கியராஜ் நடிப்பில் உருவாகியுள்ள காதல் கலந்த நகைச்சுவை திரைப்படம் தான் 'முருங்கைக்காய் சிப்ஸ்'.  இப்படத்தில் அதுல்யா ரவி, பாக்கியராஜ், மனோபாலா, மதுமிதா, ரேஷ்மா ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார்.  இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 10-ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

ஆன்டி இந்தியன் (ANTI INDIAN) :

ப்ளூ சட்டை இளமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த அரசியல் திரைப்படம் தான் 'ஆன்டி இந்தியன்'.  இப்படத்தில் வேலு பிரபாகரன், ராதாரவி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தை ஆதம் பாவா தயாரிக்கிறார்.  இந்த திரைப்படம் டிசம்பர் 10-ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

antiindian

3:33 :

நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் நடன மாஸ்டர் சாண்டி சந்திப்பில் உருவாகியுள்ள அமானுஷ்ய தமிழ் திரைப்படம் '3:33'.  இப்படத்தில் சுருதி செல்வம், ரேஷ்மா, கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஸ்வர் இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படம் டிசம்பர் 10-ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

333

க் (IKK) :

அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் படம் தான் 'க் (IKK)'.  இப்படத்தில் அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படத்தை தர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிக்கிறார்.  இப்படத்திற்கு அவினாஷ் கவாஸ்கர் இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படம் டிசம்பர் 10-ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

ALSO READ கொரோனா விதிகளை மீறி பிக்பாஸ் : கமலுக்கு நோட்டீஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News