மக்களின் வாழ்வாதாரத்தை பாஜக சிதைக்கின்றது - மன் மோகன் சிங்!

2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று உறுதியளித்த மோடி அவர்களால் 2 லட்சம் வேலைகள் கூட உருவாக்க முடியவில்லை

Last Updated : Mar 18, 2018, 02:32 PM IST
மக்களின் வாழ்வாதாரத்தை பாஜக சிதைக்கின்றது - மன் மோகன் சிங்!  title=

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய மாநாடு டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. 

இம்மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று மாநாட்டில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் "2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று உறுதியளித்த மோடி அவர்களால் 2 லட்சம் வேலைகள் கூட உருவாக்க முடியவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் பாஜக தரப்பில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் யாவும் பிரதமர் மோடி அரசால் நிறைவேற்ற முடியவில்லை. வேலையில்லா இளைஞர்களுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மோடி உறுதி அளித்தார். ஆனால் 2 லட்சம் வேலைகள் கூட அவர்களது ஆட்சியில் உருவாக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். நாளுக்கு நாள் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மோசமடைந்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மாநாட்டில் பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவிக்கையில் "நெருக்கடிகள் கொடுத்து காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் வீழ்த்த முடியாது. முந்தைய ஆட்சியின் திட்டங்களை பாஜக அரசு பலவீனப்படுத்தி வருகிறது" என பாஜக அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார்!

Trending News