#CWG_2018: இந்தியாவிற்கான முதல் தங்கம் வென்றார் மீராபாய்!

காமன்வெல்த் விளையாட்டில் இன்று நடைப்பெற்ற பளுதுாக்குதல் போட்டியில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு, இந்தியாவிற்கான முதல் தங்கம் வென்றார்!

Written by - Mukesh M | Last Updated : Apr 5, 2018, 03:20 PM IST
#CWG_2018: இந்தியாவிற்கான முதல் தங்கம் வென்றார் மீராபாய்! title=

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டில் இன்று நடைப்பெற்ற பளுதுாக்குதல் போட்டியில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு, இந்தியாவிற்கான முதல் தங்கம் வென்றார்!

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைப்பெற்று வரும் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில்,. இன்று நடைப்பெற்ற பலுதூக்குதல் போட்டியின் 48Kg மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் (கிளாஸ்கோ) வெள்ளி பதக்கம் வென்று அசத்திய இவர், இந்தியாவின் நம்பிக்கையாக திகழ்ந்தார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றதுடன், 194Kg எடை துாக்கி உலக சாதனையும் படைத்தார். 

இன்று மீராபாய் பெற்றுள்ள தங்கமானது இந்தியாவிற்கான இரண்டாவது பதக்கம் ஆகும். முன்னதாக நேற்றைய தினம் ஆண்கள் பிரிவு பலுதூக்குதல் போட்டியில், 56Kg எடைப்பிரிவில் இந்தியாவின் P குருராஜ் வெள்ளி பதக்கம் வென்றார். 

இந்நிலையில் இந்தியா தற்போது 1 தங்கம், 1 வெள்ளி என 2 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது!

Trending News