காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட தமிழக பிரச்னைகளை தீர்வு காண வலியுறுத்தி, தலைமைச் செயலக ஊழியர்களில் பலரும் கருப்புப் பட்டையுடன் செவ்வாய்க்கிழமை பணியாற்றினர்.
தமிழகத்தின் காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, அரசியல் கட்சிகளும், நடிகர் சங்கம் மற்றும் விவசாயிகளும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடா் கழகம் என மொத்தம் 9 கட்சிகள் கலந்துக்கொண்டனர்.
இதை தொடர்ந்து, தனது முதல்நாள் பயணமான “காவிரி உரிமை மீட்பு பயணம்” முதல் கட்டமாக திருச்சி முக்கொம்புவில் இருந்து கடலூா் வரையிலான பயணம் ஏப்ரல் 7-ம் தேதி பெற்றது. அஹி தொடர்ந்து இன்று முதல் தொடர் போராடங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, ஸ்டெர்லைட் பிரச்னை போன்றவற்றுக்கு தீர்வு காண்பதை வலியுறுத்தி, தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின் சார்பில், கருப்புப் பட்டையுடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, ஊழியர்களில் பலரும் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டையை அணிந்து கொண்டு பணியாற்றினர். இதேபோன்று, சட்டப் பேரவைச் செயலகப் பணியாளர்கள் சிலரும் இதேபோன்று கருப்புப் பட்டையுடன் பணிபுரிந்தனர்.