பார்ட்னரிடம் இந்த 5 குணங்கள் இருக்கா... அப்போ 7 ஜென்மத்திற்கும் உங்களை பிரியவே மாட்டார்!

Relationship Tips In Tamil: உங்கள் பார்ட்னரிடம் இந்த 5 குணநலன்களை நீங்கள் கவனித்தால், அவர் நிச்சயம் உங்களை விட்டு கடைசி வரை பிரியவே மாட்டார் எனலாம். அந்த 5 பண்புகள் என்ன என்பதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 22, 2024, 11:00 AM IST
  • உறவில் நம்பிக்கை மிக முக்கியமானது.
  • காதலோ, திருமணமோ வாழ்வில் மிக முக்கியமானது.
  • இவை பொதுவான கருத்துகள் அடிப்படையில் எழுதப்பட்டவை.
பார்ட்னரிடம் இந்த 5 குணங்கள் இருக்கா... அப்போ 7 ஜென்மத்திற்கும் உங்களை பிரியவே மாட்டார்! title=

Relationship Tips In Tamil: காதல் திருமணம் செய்கிறீர்களோ அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்கிறீர்களோ, எதுவாக இருந்தாலும் உங்களுக்கு ஏற்ற பார்ட்னரை தேர்வு செய்வதில் உங்களின் விருப்பமே முதன்மையானதாக இருக்க வேண்டும். திருமணம் என்பது வாழ்வின் முக்கியமான கட்டம் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனாலும் புற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி தங்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க பலரும் மறந்துவிடுவார்கள். 

உங்கள் பார்ட்னரின் தேர்வுதான் எதிர்கால வாழ்வில் பெரிய தாக்கம் செலுத்தும் ஒன்றாக இருக்கும். அது நேர்மையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் போகலாம். அதனால்தான் பார்ட்னரை உங்களுக்கு பிடித்ததுபோல் தேர்வு செய்ய வேண்டும் என மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. அது சரி சரியான பார்ட்னரை தான் தேர்வு செய்திருக்கிறோம் என்பதை எப்படி தெரிந்துகொள்வது என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வியாக இருக்கிறது. 

பெரும்பாலானோருக்கு காதலிக்கும் போதும் சரி, திருமணத்திற்கு பின்னரும் சரி இந்த கேள்வி எழும். இப்படி கேள்வி வருவதில் எந்த தவறும் இல்லை. நாம் பார்ட்னரை சரியாக தான் தேர்வு செய்திருக்கிறோமா, இவர் நமது கடைசி கட்டம் வரை நம்முடனேயே இருப்பாரா போன்ற கேள்விகள் வருவது இயல்பானதுதான். ஆனால், முதலில் நீங்கள் அவருக்கு ஏற்ற பார்ட்னரா என்பதையும் உறுதிசெய்துகொள்வது நல்லது.

அந்த வகையில், உங்கள் பார்ட்னரிடம் நீங்கள் இந்த 5 குணநலன்களை கண்டால் அவர் நிச்சயம் உங்களை விட்டு கடைசி வரை போகவே மாட்டார் எனலாம். அந்த 5 பண்புகள் என்ன என்பதை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | குழந்தைகளின் சொத்தில் பெற்றோர்கள் உரிமை கொண்டாட முடியுமா?

பொறுமையான மனநிலை

காதல் உறவோ, திருமண உறவோ நிச்சயம் பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க வேண்டியது வரும். எப்போதும் ரொமான்ஸ் மனநிலையிலேயே உங்களால் இருக்க முடியாது. சண்டைகள் வரும், மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்படும், பிரச்னைகள் வரும். இந்த சூழலில் உங்கள் பார்ட்னர் மிகுந்த பொறுமையுடன் அதனை சிறப்பாக கையாள்கிறார் என்றால் அவர் நிச்சயம் உங்களை விட்டு செல்ல மாட்டார் எனலாம்.

அன்பை வெளிக்காட்டுதல்

காதல் உறவிலோ, திருமண உறவிலோ பார்ட்னர் தங்களின் காதலையும், அன்பையும் வெளிக்காட்டுவது அவசியமாகும். காதலை வார்த்தையால் நிறைவாக வெளிப்படுத்த இயலாது. வார்த்தையாலும், நடத்தையாலும், சில சர்ஃப்ரைஸ் பரிசுகளாலும் உங்கள் பார்ட்னர் அவரது காதலை வெளிப்படுத்தலாம். உங்கள் மீது அதிக அக்கறையையும் அவர் காட்டலாம். சின்ன சின்ன விஷயங்களையும் பார்த்து பார்த்து உங்களுக்குச் செய்கிறார் என்றால் நிச்சயம் அவர் உங்களை விட்டுச் செல்ல மாட்டார்.

உறுதுணையாக நிற்பது

வாழ்வின் எந்த கட்டத்திலும் உங்களின் முடிவுகளுக்கும், ஆசைகளுக்கும், எண்ணங்களுக்கும் பார்ட்னர் உறுதுணையாக இருக்கிறார் என்றால் அது உங்களுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும். கனவுகளை துரத்தும் உங்களின் பயணத்தில் உங்களின் விருப்பத்தை புரிந்துகொண்டு, உங்களை ஊக்குவிக்கிறார் என்றால் நிச்சயம் அவர் உங்களை விட்டு செல்லமாட்டார். 

நம்பகத்தன்மை

காதலோ, திருமணமோ அனைத்து உறவுகளும் நம்பிக்கையின் மீது கட்டப்படும் ஒரு பெரிய கட்டடம் எனலாம். நம்பிக்கை தகர்ந்துவிட்டால் மொத்த உறவும் சுக்குநூறாக உடைந்துவிடும். எனவே, உங்களின் பார்ட்னர் மீது உங்களுக்கு அளவு கடந்த நம்பகத்தன்மை இருப்பது மட்டுமின்றி, அந்த நம்பிக்கையை எவ்வித சமரசமும் இன்றி அவர் காப்பாற்றுகிறார் என்றால் அவர் உங்களை விட்டுச் செல்ல மாட்டார் எனலாம்.

மரியாதையான இயல்பு

பாசாங்கிற்காக இல்லாமல் இயல்பாகவே பார்ட்னர் உங்கள் மீது மரியாதை கொண்டு, உங்களை பொதுவெளியிலும் மரியாதையாக நடத்துகிறார என்றால் நிச்சயம் அவர் உங்களைவிட்டு செல்ல மாட்டார்.

(பொறுப்பு துறப்பு: காதல் உறவு மற்றும் திருமண உறவு குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் ஊடக அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் தம்பதிகள் நிபுணர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளலாம். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)

மேலும் படிக்க | முதுமையை விரட்டியடிக்கும் 5 பழக்க வழக்கங்கள்... எப்போதும் இளமை ஊஞ்சலாடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News