புதுடில்லி: நீங்கள் வங்கியில் உங்கள் கணக்கைத் திறக்க இனி வங்கி கிளைக்குச் செல்லத் தேவையில்லை. ஒரே ஒரு வீடியோகால் (Videocall) மூலம் நீங்கள் இந்த வேலையைச் செய்ய முடியும். பல வங்கிகள் வீடியோ KYC வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஐடிபிஐ வங்கி வீடியோ KYC-யைத் தொடங்கியது
ஐடிபிஐ வங்கி (IDBI Bank) சேமிப்புக் கணக்கைத் திறக்க வீடியோ கணக்கு திறக்கும் (VAO) வசதியை தொடங்கியுள்ளது. இந்த வசதியில் ஒரு வாடிக்கையாளர் வீடு அல்லது அலுவலகத்தில் உட்கார்ந்தபடியே வங்கியில் தன் கணக்கைத் திறக்க முடியும்.
இதற்காக, வாடிக்கையாளர் எந்தவொரு படிவத்தையும் நிரப்ப வேண்டிய தேவையில்லை. வங்கிக் கிளைக்குச் சென்று எந்த வித செயல்முறையையிலும் ஈடுபட வேண்டியதும் இல்லை.
IDBI வங்கியின் கூற்றுப்படி, VAO முற்றிலும் தொடர்பு இல்லாத மற்றும் காகிதமற்ற வசதியாக இருக்கும்.
வீடியோ-KYC மூலம் சேமிப்புக் கணக்கை எவ்வாறு திறப்பது
1. முதலில், நீங்கள் IDBI வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.idbibank.in –க்கு செல்ல வேண்டும்
2. இதில், நீங்கள் வீடியோ KYC ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு video KYV இணைப்பு திறக்கும்
3. இதன் பின்னர் நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்குச் செல்வீர்கள். அங்கு அனைத்து தகவல்களையும் நிரப்பி தொடரவும்.
4. பின்னர் உங்கள் PAN-ஐ நிரப்பி continue-ஐ கிளிக் செய்யவும்
5. மின்னஞ்சலில் நீங்கள் ஒரு OTP ஐப் பெறுவீர்கள், அதை நிரப்பவும்.
6. உங்கள் தனிப்பட்ட தகவல்களை நிரப்பவும்.
7. கணக்கு விவரங்களை நிரப்பி continue என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் விண்ணப்ப செயல்முறை இத்தோடு நிறைவுபெரும்.
IDBI வங்கியில் Whatsapp வங்கி செயல்முறையும் உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில், IDBI வங்கி தனது வங்கி சேவைகளை Whatsapp-ல் தொடங்கியது. வாட்ஸ்அப் வங்கியில், வாடிக்கையாளர்கள் இருப்பு தகவல், காசோலை புத்தக கோரிக்கை மற்றும் அறிக்கை போன்ற பல்வேறு வசதிகளைப் பெறலாம். வங்கியின் வட்டி விகிதங்களையும் (Interest Rate), வங்கி கிளைகள் மற்றும் ஏடிஎம்கள் பற்றிய தகவல்களையும் Whatsapp மூலம் பெறலாம்.
பாங்க் ஆப் பரோடாWhatsapp வங்கி செயல்முறையை தொடங்கியது
Bank of Baroda Whatsapp வங்கி சேவையை தொடங்கியுள்ளது. பாங்க் ஆப் பரோடாவின் இந்த வசதியில், வாடிக்கையாளர்கள் தங்களது இருப்பு தகவல், மினி ஸ்டேட்மென்ட், காசோலை நிலை, காசோலை கோரிக்கை, டெபிட் கார்டு பிளாக் ஆகியவற்றை பற்றிய தகவல்களை வாட்ஸ்அப் மூலம் பெறலாம். வங்கியின் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் வங்கியின் சில வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ALSO READ: SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி... இனி இந்த வசதியும் வீட்டு வாசலில் கிடைக்கும்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR