புதுடில்லி: ஆதார் அட்டை (Aadhar Card) மிக முக்கியமான அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு அரசாங்க திட்டத்தின் (Government Schemes) சலுகைகளையும் பெற ஆதார் தேவை. எனவே, ஆதாரில் சரியான தகவல்கள் இருப்பது மிகவும் முக்கியமாகும். பல முறை கவனக்குறைவாக ஆதாரில் நாம் சில தவறுகளை செய்து விடுகிறோம்.
ஆதாரில் பல வகையான மாற்றங்களைச் செய்ய முடியும் என்றாலும், சிலவற்றை மாற்றுவதற்கு அதற்கு ஏற்ற ஆவணங்கள் தேவைப்படுகின்றன. சில தகவல்களை மாற்றுவதற்கு எந்த ஆவணங்களும் தேவைபடுவதில்லை. இதற்கு, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டியது மட்டும்தான்.
எந்த ஆவணமும் இல்லாமல் ஆதாரில் எந்தெந்த தகவல்களை எல்லாம் அப்டேட் செய்ய முடியும் என்பதை இப்போது பார்க்கலாம்.
ALSO READ: ஆதார் அட்டை தொடர்பான பிரச்சனையை இனி நொடியில் தீர்க்கலாம்!
கீழ்கண்ட அப்டேட்டுகளுக்கு ஆவணங்கள் தேவையில்லை:
நீங்கள் புகைப்படம், பயோமெட்ரிக்ஸ், பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும் என்றால், இதற்காக நீங்கள் எந்த வகையான ஆவணத்தையும் வழங்க தேவையில்லை. இதற்காக, உங்கள் ஆதார் நகலுடன் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு, முன்னரே அபாயிண்ட்மெண்ட் பெற்றுக்கொண்டு செல்லுங்கள். உங்கள் தேவைக்கேற்ப, அனைத்தும் ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும். UIDAI ட்வீட் மூலம் இந்த தகவலை வழங்கியுள்ளது.
#AadhaarUpdateChecklis
No document required for update of Photograph, Biometrics, Gender, Mobile Number and Email ID in your Aadhaar. Just take your Aadhaar and visit any nearby Aadhaar Kendra. Book appointment from: https://t.co/QFcNEqehlP pic.twitter.com/0XMtVFNSgE— Aadhaar (@UIDAI) August 21, 2020
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய 12 இலக்க தனித்துவமான எண் ஒரு சரியான சான்றாக செயல்படுகிறது. மேலும் அரசாங்க மானியங்களைப் பெறுவதற்கு இது முக்கியமான ஆவணமாகும். ஆதாரில் சில தரவுகளை மாற்ற, நீங்கள் அதன் தொடர்புடைய ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆதார் அட்டையில், பெயர், முகவரி மற்றும் உங்கள் பிறந்த தேதியை புதுப்பிக்க விரும்பினால், இதற்கான சரியான ஆவணத்தை நீங்கள் வழங்க வேண்டும். இதற்கான ஆவணங்கள் இல்லாமல், இவற்றை உங்கள் ஆதாரில் புதுப்பிக்க முடியாது.
இந்த சேவைகள் ஆதார் சேவை மையங்களில் கிடைக்கின்றன
ஆதார் சேவை மையங்களில் (Aadhar Base Centers), புதிய ஆதார் பதிவு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மொபைல் எண் புதுப்பிப்பு, மின்னஞ்சல் ஐடி புதுப்பிப்பு, பிறந்த தேதி, பாலின புதுப்பிப்பு, பயோமெட்ரிக் புதுப்பிப்பு போன்ற சேவைகள் கிடைக்கின்றன.
ALSO READ: PAN Card பெற பத்தே நிமிடங்கள் போதும்: இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்!!