Watch Video: Workout செய்துகொண்டே மாவரைக்கலாம்! வைரலாகும் பெண்ணின் கண்டுபிடிப்பு!!

கொரோனா காலத்தில் ஒரு பெண் உருவாக்கியுள்ள ஒரு புது வித உடற்பயிற்சி முறை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு சிறப்பம்சமும் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 6, 2020, 01:31 PM IST
  • கொரோனா காலத்தில் மனிதனின் வாழ்க்கை முறைகள் மாறிவிட்டன.
  • ஒரு பெண் தனது உடற்பயிற்சி செய்யும் சைக்கிளில் சில மாற்றங்களைச் செய்துள்ளார்.
  • இதனால் அவரால் உடற்பயிற்சி செய்துகொண்டே அதன் மூலம் மாவையும் அரைக்க முடிகிறது.
Watch Video: Workout செய்துகொண்டே மாவரைக்கலாம்! வைரலாகும் பெண்ணின் கண்டுபிடிப்பு!! title=

கொரோனா (Corona) காலத்தில் மனிதனின் வாழ்க்கை முறைகள் மாறிவிட்டன. மனிதர்கள் வழக்கமாக செய்துகொண்டிருந்த பல பணிகளை, பல வேலைகளை அவர்களால் செய்ய முடியவில்லை. பள்ளிகள், அலுவலகங்கள் போன்ற அத்தியாவசிய நிறுவனங்கள் கூட மூடப்பட்டன.

ஜிம்களுக்குச் (Gym) சென்று உடற்பயிற்சி (Workout) செய்து கொண்டிருந்த பலர், சில நாட்களுக்கு அங்கு செல்ல முடியாததைப் பற்றி கவலைப்பட்டாலும், பின்னர் வீடுகளிலேயே உடலுக்கான பயிற்சியை எடுக்கத் தொடங்கினர். ஜிம்முக்கு செல்லுவது மட்டுமல்லாமல், பொதுவாக பலர் தங்களுக்கான வித்தியாசமான உடற்பயிற்சி முறைகளை ஏற்படுத்திக்கொண்டனர்.

அப்படி ஒருவர் உருவாக்கிய ஒரு புது வித உடற்பயிற்சி முறை சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகி வருகிறது. இதில் ஒரு சிறப்பம்சமும் உள்ளது. இதன் மூலம் வீட்டிலேயே நல்ல உடற்பயிற்சி செய்ய முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், மற்றொரு வேலையும் செய்ய முடிகிறது. ஆம்!! இதை செய்து கொண்டே மாவரைக்கலாம்!!

இந்த வீடியோவில் ஒரு பெண் தனது உடற்பயிற்சி செய்யும் சைக்கிளில் (Gym Cycle) சில மாற்றங்களைச் செய்துள்ளார். இதனால் அவரால் உடற்பயிற்சி செய்துகொண்டே அதன் மூலம் மாவையும் அரைக்க முடியும். வீட்டிலிருந்தபடியே ஒரு பெண்ணால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய விஷயம் சமூக ஊடகங்களில் அனைவராலும் பாராட்டப்படுகின்றது.

இந்த வீடியோவை IAS அதிகாரி அவனீஷ் ஷரன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு. உடற்பயிற்சியோடு வேலையும் நடக்கிறது. நல்ல கமெண்டரியும் அளித்துள்ளீர்கள்” என்று அந்தப் பெண்ணை இந்தியில் புகழ்ந்துள்ளார்.

இந்த வீடியோ ஏற்கனவே ட்விட்டரில் 700k க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் 1000 முறை ரீ ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த பல்நோக்கு இயந்திரத்தைப் பார்த்து நெட்டிசன்கள் (Netizens) ஆச்சரியப்பட்டார்கள். ஒரு பயனர் அந்தப் பெண்ணிடம் இந்த இயந்திரத்திற்கு காப்புரிமை (Patent) பெறுமாறு கூறியுள்ளார்.

கொரோனா காலம் மனிதனுக்கு பல கஷ்டங்களை அளித்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், சிலர் இதை தங்கள் புத்திசாலித்தனத்தால் பல ஆக்கப்பூர்வமான முறைகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ALSO READ: Pressure Cooker-ல் தங்கம்: Viral ஆகும் கேரளாவின் தங்கக் கடத்தல் படங்கள்!!

Trending News