தனது முன்னாள் கணவர் இருவரை நம்பனாக மாற்றி ஒரே வீட்டில் வாழ்ந்துவரும் கில்லாடி பெண்!!
தென் ஆப்ரிக்காவின் கேப் டவுண் நகரை சேர்ந்த 29 வயதுடைய பெண் அலி ஜோன்ஸ், 30 வயதுடைய இவரது பள்ளி நண்பர் டாமியன் க்ரூன்டே என்பவரும் பள்ளி நண்பர்கள். இவர்கள் இருவரும் பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். இவர்கள் பள்ளி காலம் முடிந்து சில ஆண்டுகளுக்கு பின்பு ஒரு நாள் இவர்கள் நண்பர்களாக இணைந்து வெளியூருக்கு டூர் சென்றுள்ளனர். அங்கு டாமியனும், அலி யும் ஒன்றாக சேர்ந்து தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆனால், அலிக்கு வேறு ஒருவருடனான தொடர்பில் ஏற்கனவே ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த சம்பவம் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்துள்ளது. அதன் பின்பு இவர்கள் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, 2 குழந்தைகளையும் வளர்ப்பதிலும், வேறு சில விஷயங்கள் காரணமாகவும் இருவரும் இடையே மனகசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அதை சரி செய்ய முயற்சி செய்தனர். இந்நிலையில், அலி தனது 19 வயதிலேயே டாமியனுக்கு முன்பாக வேறு ஒருவருடன் வாழ்ந்து பெண் குழந்தையை பெற்றெடுத்ததால் தற்போது அந்த குழந்தையும் வளர்ந்து வருகிறது.
இதையடுத்து, அலிக்கு 26 வயதுடைய மாட்டி ருச்டன் என்பவரும் மீதும் காதல் மலர்ந்துள்ளது. மாட்டினுடன் சேர்ந்து வாழ வேண்டும் என விரும்பிய இரண்டு கணவர்களையும் எப்படியாவது நண்பர்களாக்கிவிட வேண்டும் என யோசிக்க ஆரம்பித்தார். ஆனால் அவரும் முயற்சி தொளிவியில் முடிந்தது. இந்நிலையில் தனது இரண்டு குழந்தைகளையும் டாமியன் மற்றும் மாட்டியின் பொறுப்பில் விட்டு விட்டு, லண்டனிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, மாட்டியும், டாமியனும் அவ்வப்போது குழந்தை பாராமிப்பிற்காக சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது இருவரும் பேசி பழகி நண்பர்களாகிவிட்டனர். சுமார் 3 மாதங்களுக்கு பின்பு அலி திரும்பி வீட்டிற்கு வந்த அன்று மாலை மூவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்பொழுது இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து வாழ்வது குறித்து நகைச்சுவையாக பேசி சிரித்துள்ளனர். ஆனால், அந்த ஐடியா அனைவருக்கும் பிடித்திருந்தது. அன்று முதல் அவர்கள் மூன்று பேரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களே அலியின் குழந்தைகளையும் பராமரித்து வருகின்றனர்.
இது குறித்து அலி கூறுகையில்: "இரு ஆண்களுடனும் ஒரே நேரத்தில் வாழ்வது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என நினைத்தேன். ஆனால் மூவருக்குமிடையே நல்ல புரிதல் இருந்தால் அது அழகான உறவாக அமையும். அதனால் தான் இவர்கள் இருவரையும் நண்பர்களாக்கும் முயற்சியை மேற்கொண்டேன்" என தெரிவிதுள்ளார்.