இது பண்டிகைக்காலம். ஆடி மாதம் பிறந்துவிட்டாலே தொடர்ந்து பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் களைக்கட்டும். போட்டிகளும், விளையாட்டும் மகிழ்ச்சியைத் தரும். கண்ணன் பிறந்த நன்னாளை கிருஷ்ணாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். இன்று உறியடி விளையாட்டு நடைபெறுவது தொன்று தொட்டு வரும் வழக்கம்.
உறியடியில் பங்கேற்பதும், பார்த்துக் களிப்பதும் மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றாலும், உறியடி ஏன் விளையாடப்படுகிறது என்ற காரணம் தெரியுமா? கோபியர்களின் தயிர் பானைகளை கண்ணன் ஏன் உண்டிவில் கொண்டு உடைத்தான் என்ற ரகசியமும் தெரியுமா?
இன்று (ஆகஸ்ட் 30, 2021), ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கோவில்கள் முதல் வீடுகள் வரை இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வழக்கமாக பல இடங்களில் உறியடி விளையாட்டிற்கும் ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கத்தால் கட்டுப்பாடுகள் உள்ளன.
READ ALSO | Lord Krishna! ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு அவதாரத்திலும் யசோதாவே கண்ணனின் அன்னை!
கிருஷ்ணர் கோபிகளின் பானைகளை உடைப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அதன் பின் உள்ள ஆழமான கருத்தும், காரியமும் அனைவருக்கும் தெரியாதது. நவீன யுகத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் நமது 'ஆன்மீக தத்துவத்தின்' மிகப்பெரிய தூண்.
ஸ்ரீ கிருஷ்ணர் மனித உருவத்தில் மட்டுமே அறியப்பட்டிருந்தாலும், அவருடைய வாழ்க்கை மனிதர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு.
கிருஷ்ணர், குழந்தையாக இருந்தபோது, கோகுலத்திலிருந்து மதுராவிற்கு வரிசையாக சென்றுக் கொண்டிருந்த கோபியர்களின் பால் மற்றும் தயிர்ப் பானையை உடைத்தார்.
உண்மையில், ஸ்ரீ கிருஷ்ணர் குழந்தை பருவத்திலிருந்தே தனது நாட்டின் நிலைமைகளையும் பிரச்சனைகளையும் உணர்ந்து அவற்றைத் தீர்க்கத் தொடங்கினார்.
Read Also | அயோத்தி ராமர் ஆலயம் கட்ட ஆகும் செலவு என்ன தெரியுமா?
அரசன் கம்சன், கோகுலம் போன்ற கிராமங்களின் மீதான வரியை அதிகரித்தார். இது மக்களின் மீதான பொருளாதார ஏகாதிபத்தியத்தின் வடிவமாக இருந்தது. இதை எதிர்க்கும்விதமாக கண்ணன் தனது உண்டிவில் கொண்டு பானைகளை உடைத்தார்.
கொடுங்கோன்மையை எதிர்ப்பதற்கும், அப்பாவி பெண்களின் பானையை உடைப்பதற்கும் என்ன தொடர்பு? அரசனுக்கு கப்பம் கட்டுவதற்காக தங்கள் உணவுப் பொருட்களை தலையில் சுமந்துக் கொண்டு, மதுராவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்.
கோபியர்களின் தயிர், வெண்ணெய், பால் போன்ற பொருட்கள் அரசனுக்கு போய் சேரக்கூடாது என்று நினைத்ததால் தான் கண்ணன் கோபியர்களின் பானைகளை உடைத்தார்.
உடைந்த பானைகளில் இருந்த பால், தயிர், வெண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை தன்னுடன் இருந்த நண்பர்களுக்கும் கொடுத்தும், தானும் உண்டும் மகிழ்ந்தார் நந்தகோபனின் மகன் கோவிந்தன்.
Also Read | ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள்
உண்மையில், இந்த பால் மற்றும் வெண்ணெய் அந்த குழந்தைகளின் உரிமை என்பதை புரிய வைக்க கண்ணன் செய்த லீலைகள் இவை.
தனக்கு கப்பம் வந்து சேராததால், விசாரித்து வர அனுப்பிய ஊழியர்களின் செய்தியை அறிந்தான் அரசன் கம்சன். அதன் பிறகே கண்ணனையும், அவர் அண்ணனையும் மதுராவிற்கு வர வைத்ததும், கம்சன் மண்ணோடு மண்ணானதும் உலகம் அறிந்த உண்மை.
ஆனால், உறியடியின் பின் உள்ள பொருளாதார பின்னணி மட்டும் பாலில் உள்ள வெண்ணெய் போல மறைபொருளாய் அனைவருக்கும் தெரியாது. இன்று கோகுலத்தின் பாலகன் கண்ணன் உதித்த நன்னாள்… உறியடித்து கொண்டாட முடியாவிட்டாலும், மனதார வழிபட்டு கிருஷ்ணனின் அருளைப் பெறுவோம்…
Also Read | Rasipalan 30 August 2021: இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2021
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR