Why Even Beautiful People Remain Single : நமக்கு தெரிந்தவர் கூட்டத்தில், நண்பர்கள் மத்தியில் அல்லது நாமே கூட, சிங்கிளாக இருப்போம். பலர் அப்படிப்பட்டவர்களை பார்க்கும் போது கேட்கும் கேள்வி, “அழகாதானே இருக்க? எப்படி சிங்கிளா இருக்க?” என்பதுதான். இங்கு அனைவருமே, அழகாக இருக்கும் அனைவருமே யாருடனாவது உறவில் இருப்பார்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், பெரும்பாலான சமயங்களில் இது உண்மையாக இருப்பதில்லை. இப்படி, அழகாக இருப்பவர்களும் காதல் உறவு அல்லது திருமண உறவு செட் ஆகாமல் சிங்கிளாக இருப்பது எதனால் தெரியுமா? இங்கு அதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
அதிக எதிர்பார்ப்புகள்:
அழகாக இருப்பவர்களில், தெளிவாக இருப்பவர்கள், தங்களுக்கெனவும், தனக்கென வருபவர்களுக்காகவும் ஒரு தரநிலையை வைத்திருப்பர். இவர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் அதை பூர்த்தி செய்யும் வகையில், ஒரு சிலர் மட்டுமே அவர்களின் கையில் கிடைப்பர். இதனால், இவர்கள் அனைவரிடத்திலும் காதலையோ அன்பையோ எதிர்பார்க்க மாட்டார்கள்.
தவறான கண்ணோட்டம்:
அழகாக இருப்பவர்கள், கண்டிப்பாக யாருடனாவது திருமண உறவில் இருப்பர் என்ற தவறான கன்ணோட்டம் பலர் மனங்களில் இருக்கிறது. இதனால், இவர்களை சிலருக்கு பிடித்திருந்தாலும் ஒரு சிலர் “இவர் தன்னை விட மிகவும் உயர்ந்தவர்” அல்லது “இவருக்கு அதிக போட்டி இருக்கும்” அல்லது “இவர் ஏற்கனவே ஏதேனும் உறவில் இருப்பார்” என நினைத்துக்கொண்டு அவர்களை அப்ரோச் செய்யாமல் இருப்பர். இதனால் இவர்கள் சிங்கிளாக இருப்பர்.
மிரட்டலான தொனி:
அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பவர்கள், பார்ப்பதற்கு கொஞ்சம் மிரட்டலாக இருப்பர். இதனால் இவர்களை பார்த்தவுடன் முதலில் அனைவருக்கும் பயப்பட வேண்டும் என்றுதான் தோன்றும். எனவே, பலர் இவர்களுக்கு அருகில் வரவே பயப்படுவர். இதனாலும் இவர்கள் சிங்கிளாக இருப்பர்.
சுய வளர்ச்சி:
அழகாக இருப்பவர்களில் பலர், தங்களின் இளமை வருடங்களை கனவுகளை பிடிக்க ஆர்வம் காட்டுவர். தான் ஒரு மனிதராக வளர வேண்டும் என்று நினைக்கும் இவர்கள், தங்களை முதலில் வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவர். இதனால், அவர்களுக்கு காதலிக்கவோ பிறரிடம் காதல் குறித்து பேசவோ நேரம் இல்லாமல் இருக்கும்.
வெளித்தோற்றத்தை மட்டும் பார்ப்பவர்கள்:
அழகாக இருப்பவர்களிடம் வந்து பேசும் பலர், அவர்கள் அழகாக இருப்பதால் மட்டும் வந்து பேசுபவர்களாக இருப்பர். அந்த அழகைத்தாண்டி தனக்கென்று ஒரு தனித்துவம் இருப்பதை யாரும் பார்க்காததாலும், இதை மட்டுமே வைத்து ஒருவர் தன்னுடன் உறவு ஏற்படுத்திக்கொள்வதையும் இவர்கள் விரும்புவதில்லை.
நம்பிக்கை இல்லாமல் போவது:
அழகாகவும் வசீகரமாகவும் இருப்பவர்கள், பிறர் தன்னை நன்றாக நடத்த அழகு மட்டுமே பெரிய காரணமாக இருப்பதை பல இடங்களில் பார்த்திருப்பர். இதனால், அவர்களுக்கு பிறரின் மீது நம்பிக்கை வருவதே மிகவும் கடினமாக இருக்கும். இதனால், தன்னிடம் யார் எந்த நோக்கத்துடன் பழகுகின்றனர் என்பதில் மிகவும் இவர்கள் கவனமாக இருப்பர். இதனால், இவர்களுக்கு காதல் உறவு அமைவதில் சிக்கல் ஏற்படுகிறது.
சுதந்திர உணர்வு:
சிங்கிளாக இருப்பவர்களுக்கு தான் எந்த கமிட்மெண்டிலும் இல்லாமல் இருக்கும் ஒரு வித சுதந்திர உணர்வு இருக்கும். தன்னைத்தானே அனைத்திற்கும் இவர்கள் நம்புவதால், பிறரது கையை எதிர்பார்ப்பதில்லை. இப்படியே இவர்கள் பல ஆண்டுகள் இருப்பதால், பிறர் இவர்களிடம் காதலுடன் வந்து பேசும் போது அந்த சுதந்திர உணர்வு பரிபோய் விடுமோ என்று இவர்கள் பயப்படுவர்.
காதல் தோல்வி:
அழகாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, பலருக்கு காதல் தோல்விக்கு பிறகு இன்னொரு காதலை ஏற்றுக்கொள்வது என்பது முடியாத காரியமாக இருக்கும். முன்னர் இருந்த உணர்வும், இதயம் உடைந்து போனது போன்ற உணர்வும் இப்போதும் ஏற்பட்டு விடுமோ என்று அவர்கள் பயப்படுவர். இதனாலும் அவர்கள் சிங்கிளாக இருப்பர்.
மேலும் படிக்க | ஆண்களே..! காதலிக்கும் போது ‘இந்த’ 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ