SBI vs HDFC வங்கி vs ICICI... எந்த வங்கியின் FD பெஸ்ட்? தெரிந்துக்கொள்ளுங்கள்

SBI vs HDFC Bank vs ICICI Bank: எஸ்பிஐ வங்கியின் 400 நாட்கள் குறிப்பிட்ட கால திட்டத்திற்கான (அம்ரித் கலாஷ்) தற்போதைய எஃப்டி வட்டி விகிதம் 7.10% ஆகும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 18, 2023, 03:56 PM IST
  • முதலீடு செய்வதற்கு முன் சிறந்த வருமானம் எங்கே கிடைக்கும்.
  • பொது குடிமக்களுக்கு FD மீது 3 சதவீதம் - 7.10 சதவீதம் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
  • ஐசிஐசிஐ வங்கி பொதுக் குடிமக்களுக்கு 3 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வழங்குகிறது.
SBI vs HDFC வங்கி vs ICICI... எந்த வங்கியின் FD பெஸ்ட்? தெரிந்துக்கொள்ளுங்கள் title=

எஸ்பிஐ vs ஹெச்டிஎஃப்சி வங்கி vs ஐசிஐசிஐ வங்கி FD வட்டி விகிதங்கள்: நிலையான வைப்பு (FD) என்பது ஒரு பாரம்பரிய முதலீட்டு வழிமுறையாகும். இதில் நீங்கள் நிலையான வருமானத்தைப் பெறுவீர்கள். அதுவும் எந்த ஆபத்தும் இல்லைமல். பொதுவாக நாம் அனைவருமே FD இல் அதிக வருமானத்தை ஈட்ட விரும்புகிறார்கள். நீங்களும் முதலீட்டில் ரிஸ்க் எடுக்காமல் நடுத்தர வருமானத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் முதலீட்டாளராக இருந்தால், FD (நிலையான வைப்புத்தொகை) திட்டம் உங்களுக்கான சரியான தேர்வாகும். உங்களுக்காக நாட்டின் மூன்று பெரிய வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் (ICICI Bank) FDகளில் கிடைக்கும் வட்டியை தெரிந்துக்கொள்ளுங்கள், இதன் மூலம் முதலீடு செய்வதற்கு முன் சிறந்த வருமானம் எங்கே கிடைக்கும் என்பதை நீங்கள் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

எஸ்பிஐ வங்கியின் எஃப்.டி வட்டி விகிதங்கள்:
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank Of India) அக்டோபர் மாதத்தில் FD மீதான வட்டி விகிதங்களில் (SBI Fixed Deposit Interest rates) எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இந்த வங்கி கடைசியாக பிப்ரவரி 15 ஆம் தேதி, 2023 அன்று விகிதங்களை மாற்றியது. வங்கி தற்போது பொது குடிமக்களுக்கு FD மீது 3 சதவீதம் - 7.10 சதவீதம் வட்டி விகிதங்களை வழங்குகிறது. SBI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, 400 நாட்கள் குறிப்பிட்ட கால திட்டத்திற்கான (அம்ரித் கலாஷ்) தற்போதைய வட்டி விகிதம் 7.10 சதவீதம் ஆகும். அதேசமயம் மூத்த குடிமக்கள் 7.60% வட்டி விகிதத்திற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்த திட்டம் வரும் டிசம்பர் 31, 2023 வரை செல்லுபடியாகும்.

மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட், கட்டாயம் இந்த செய்தியை படியுங்கள்

ஐசிஐசிஐ வங்கியின் எஃப்.டி வட்டி விகிதங்கள்: 
தனியார் துறையான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) பொதுக் குடிமக்களுக்கு 3 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen Fixed Deposit Interest Rate) 3.50 சதவீதம் முதல் 7.60 சதவீதம் வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது. லைவ்மிண்ட் செய்திகளின்படி, 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு 7.60 சதவீதம் என்ற அதிகபட்ச வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த விகிதங்கள் 16 அக்டோபர் 2023 முதல் பொருந்தும்.

எச்.டி.எஃப்.சி வங்கியின் எஃப்.டி வட்டி விகிதங்கள்:
தனியார் துறையான எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) இரண்டு புதிய சிறப்பு நிலையான வைப்புகளை (Fixed Deposits) 35 மாதங்களுக்கு 7.15 சதவீதம் மற்றும் 55 மாதங்களுக்கு 7.20 சதவீதம் வட்டி விகிதங்கள் வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 15 மாதங்கள் முதல் 18 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் FD திட்டங்களில் வைப்புத்தொகைக்கு 7.10 சதவீதம் வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. இதற்கான புதிய கட்டணங்கள் அக்டோபர் 1, 2023 முதல் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Free LPG Cylinder: ஜாக்பாட் பரிசு, தீபாவளி முதல் ஆண்டுக்கு இருமுறை இலவச கேஸ் சிலிண்டர் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News