பிறந்த குழந்தைக்கு எப்போது மொட்டையடிக்க வேண்டும்? சரியான நேரத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Newborn hair care ; பிறந்த குழந்தைக்கு குறிப்பிட்ட சில மாதங்கள் கழித்து மொட்டையடிக்கும் பழக்கம் மக்களிடையே இருக்கும் நிலையில், எந்த நேரத்தில் மொட்டையடிக்க வேண்டும், சரியான நேரம் எது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 20, 2024, 04:18 PM IST
  • பச்சிளம் குழந்தைகளுக்கு மொடையடிக்கும் டிப்ஸ்
  • ஒரு வயதுக்கு முன்பாக மொட்டையடிக்கிறீர்களா?
  • நீங்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்
பிறந்த குழந்தைக்கு எப்போது மொட்டையடிக்க வேண்டும்? சரியான நேரத்தை தெரிந்து கொள்ளுங்கள் title=

Lifestyle News of Child : இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் குழந்தைக்கு மொட்டையடிப்பதைக் கூட ஒரு சடங்காக பின்பற்றுகிறார்கள். சாதி வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து பிரிவினரும் குழந்தைக்கு மொட்டையடிப்பதை ஒரு குடும்ப நிகழ்ச்சியாகவே கடைபிடிக்கிறார்கள். மத நம்பிக்கைகளின்படி பார்க்கும்போது குழந்தைக்கு மொட்டையடித்தால் முந்தைய பிறப்புகளின் பாவங்கள் எல்லாம் ஓடிவிடும் என்பது ஐதீகம். அதேநேரத்தில் மருத்துவ ரீதியாக பார்க்கும் போது குழந்தைகளுக்கு முதல் மொட்டை அடிப்பதற்கு என்று கால நிர்ணயம் இருக்கிறது. சிலர் 11 மாதங்களிலும், சிலர் மூன்று அல்லது ஐந்தாம் ஆண்டில் கூட மொட்டையடிக்கிறார்கள். ஆனால், எப்போது மொட்டையடிப்பது சிறந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | Face Wash Tips: ஒரு நாளுக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும்?

பச்சிளம் குழந்தைக்கு ஏன் மொட்டையடிக்கக்கூடாது?

குழந்தை பிறக்கும்போது தலையின் எலும்புகள் இணைந்திருக்காது. அதனால், குழந்தைகளின் தலை மிகவும் மென்மையாக இருக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளின் தலையைக்கூட அழுத்தக்கூடாது. அப்படி செய்தால் அது விபரீதமாக  அமையவும் வாய்ப்பு இருக்கிறது. அந்தநேரத்தில் மொட்டையடித்தால் குழந்தையின் தலையில் சிறு  கீறல் ஏற்பட்டாலும் அது நேரடியாக குழந்தையின் மூளையை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் பச்சிளம் குழந்தைகளுக்கு மொட்டையடிக்கக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

குழந்தைக்கு எப்போது மொட்டையடிக்க வேண்டும்?

குழந்தைகளின் தலையில் எலும்புகள் நன்றாக இணையும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன்னதாக மொட்டையடிக்கக்கூடாது. பொதுவாக, குழந்தையின் தலையின் இந்த எலும்புகள் ஆறு மாதங்கள் முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை இணைகின்றன. எனவே, குழந்தையின் தலையின் இந்த எலும்புகள் சேரும் வரை, தலையை மொட்டையடிக்கக்கூடாது. பொதுவாக 11வது மாதங்களில் மொட்டையடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் மருத்துவரின் ஆலோசனையை பெற்று குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது சிறந்தது. ஆரோக்கியமாக குழந்தை இருந்தால் பிரச்சனை இல்லை, ஏதேனும் சத்துகுறைபாடுகள் இருந்தால் மொட்டையடிப்பதற்கு முன்பு மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்.

பிறந்த குழந்தைக்கு மொட்டை அடிக்கும் முன் கவனிக்க வேண்டியவை

பிறந்த குழந்தைக்கு மொட்டையடிக்கும் முன் அந்த குழந்தையின் ஆரோக்கியம் குறித்து மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள். எந்த பிரச்சனையும் இல்லை என மருத்துவர் கூறினால் அதன்பிறகு மொட்டையடிப்பது குறித்து பரிசீலிப்பது நல்லது.  தலையில் பிரச்சனை ஏதேனும் இருந்தால் மொட்டையடிப்பதில் அவசரம் காட்ட வேண்டாம். அதேபோல், தோல் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் மொட்டையடிக்கும்போது அதற்காக பயன்படுத்தும் கத்தியில் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம். 

மேலும் படிக்க | அம்பானி குடும்பத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News