அசிங்கமாக தொங்கும் தொப்பையைக் குறைக்கணுமா? இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

Dinner Options For Weight Loss In Tamil: உடல் எடையை குறைக்க, நீங்கள் இரவு உணவைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் சரியான உணவை தேர்வு செய்து அவற்றை உண்ண வேண்டும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 10, 2023, 06:49 AM IST
  • உடல் எடையை குறைக்க இரவு உணவில் இந்த 10 பொருட்களை சாப்பிடுங்கள்.
  • இரவு உணவிற்குப் பிறகு நீங்கள் உடனடியாக படுக்க வேண்டாம்
  • குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள்.
அசிங்கமாக தொங்கும் தொப்பையைக் குறைக்கணுமா? இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள் title=

நாம் அனைவரும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்புகிறோம். ஆனால் அதிகரித்த உடல் எடை அல்லது உடல் பருமன் காரணமாக இது சாத்தியமில்லை. உடல் பருமன் காரணமாக, நாம் அவமானத்தை எதிர்கொள்வதோடு, பல தீவிர நோய்களுக்கும் பலியாகிவிடுகிறோம். எனவே இதற்கு உடலில் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது அவசியம். நம்மில் பலர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். பல்வேறு வகையான உணவுமுறைகளை (Diet Chart) கடைப்பிடிப்பதைத் தவிர, ஜிம்மில் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டும் நினைத்த பலனை பெறுவதில்லை. மறுபுறம் உடல் எடையை குறைக்க அல்லது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க முயற்சிப்பவர்கள் இரவில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது அல்லது மிகக் குறைவாக சாப்பிடுவது பெரும்பாலும் காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்கும் போது இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நம்பப்படுகிறது, ஏனென்றால் இரவு உணவில் நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் அதை ஜீரணிக்க உங்கள் செரிமான அமைப்பு கடினமாக உழைக்க வேண்டும். மேலும், உணவு சரியாக ஜீரணிக்கப்படவில்லை என்றால், இது எடை அதிகரிப்புக்கு மட்டுமே பங்களிக்கும்.

ஆனால் உடற்பயிற்சி நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் எடையை குறைக்க, நீங்கள் இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை, மாறாக சரியான உணவை எடுத்துக்கொண்டால் போதும். இரவு உணவில் சரியான உணவுகளை சாப்பிட்டால், உடல் எடை குறையும். இப்போது கேள்வி என்னவென்றால், நீங்கள் இரவு உணவில் என்ன சாப்பிடலாம்? எனவே இந்தக் கட்டுரையில், உடல் எடையைக் குறைக்க இரவு உணவில் சாப்பிட வேண்டிய 10 ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | தொள தொள தொப்பையை குறைக்க 'சூப்பர்' யோகாசனங்கள்

உடல் எடையை குறைக்க இரவு உணவில் இந்த 10 பொருட்களை சாப்பிடுங்கள்  (Dinner Options For Weight Loss In Tamil):
1. 15 கிராம் துருவிய சீஸ் உடன் ஓட்ஸ் மற்றும் ஜோவர் சீலா
2. வெஜிடபிள் உப்மா, அதனுடன் 1 ஸ்பூன் மூளை கட்டிய பயிறை சேர்த்து சாப்பிடவும்
3. தவா பனீருடன் 80 கிராம் சாத்தான காய்கறிகளை சாப்பிடவும் (பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்)
4, கறிவேப்பிலை மற்றும் கடுகு தாளித்த ஓட்ஸ் மற்றும் காய்கறி இட்லி
5. சியா விதை புட்டிங்
6. தேங்காய் சட்னியுடன் பச்சை பயிறு தோசை
7. மூளை கட்டிய பயிறு மற்றும் காய்கறிகளுடன் ராகி பிரட்
8. ஓட்ஸ் மற்றும் கடலை மாவு தோக்லா
9. வெஜிடபுள் சூப்பில் 2 ஸ்பூன் குயினோவா சேர்த்து சாப்பிடவும்
10. காய்கறிகளுடன் சாமை அரிசி மற்றும் பாசி பருப்பு கிச்சடி

உடல் செயல்பாடுகளைச் செய்வது முக்கியம்:
இரவு உணவிற்குப் பிறகு நீங்கள் குறிப்பாகக் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இரவு உணவிற்குப் பிறகு நீங்கள் உடனடியாக படுக்கவோ அல்லது நீண்ட நேரம் உட்காரவோ கூடாது. சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடக்கவும். உடல் எடையை குறைக்க உடல் சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடற்பயிற்சி செய்யாமலே எடையை எளிமையாக குறைக்கலாம்-‘இந்த’ 5 விஷயங்களை செய்தால் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News