மனிதனுக்கு ஐம்புலன்கள் என்பது மிகவும் முக்கியமானதாகும். அதில் முக்கியமானது, பார்வை. புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது கண்களின் நலனை பார்த்துக்கொள்ள உதவும். பார்வை நலனை மட்டுமன்றி, ஒட்டுமொத்த உடல் நலனையுமே பார்த்துக்கொள்ள உதவும்.
வைட்டமின் நிறைந்த உணவுகள்..
வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதால் மாலைக்கண் நோய், வயது மூப்பால் ஏற்படும் பார்வை குறைபாடு ஆகியவற்றை தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிகம் இனிப்பான உணவுகள் உள்ளிட்டவற்றை சாப்பிடுவதால் குடல் வீக்கம் அதிகரித்து அதனால் ஏற்படும் ஆக்ஸிடேடிவ் அழுத்தமும் மேலோங்கும் இதனால், கண் பார்வை பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கண் பார்வையினை மேம்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
>ஒமேகா 3 ஃபேட்டி அமில உணவுகள்: ஒமேகா 3 சத்துக்கள் அடங்கிய உணவு பொருட்கள், கண் பார்வையில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது. இதனால், கண்கள் ட்ரை ஆகாமல் பார்த்துக்கொள்ளலம். கண் புரை பாதிப்புகளையும் இதனால் தடுக்க முடியும் என சில மருத்துவ ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.
>லுடீன் உணவுகள்: கண்களில் உள்ள ரெடீனா பகுதியை பாதுகாக்க உதவும் உணவுகளை உங்களது டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளால், கண் பார்வைக்கு உதவும் கரும் புள்ளி ஆரோக்கியமாக இருக்கும். இது, கண் பார்வயை மேம்படுத்துவது மட்டுமன்றி மூளை ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. கீரை, சோளம், பச்சை வகை காய்கறிகள் இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளாகும்.
மேலும் படிக்க | புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் காளான் சாப்பிடலமா?
>வைட்டமின் ஏ உணவுகள்: கண் பார்வையை பார்த்துக்கொள்வதில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த உணவுகள் பெரும் பங்காற்றுகின்றன. வைட்டமின் ஏ சத்து உடலில் இல்லை என்றால், பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதாம். முட்டை, தக்காளி, பால், மீன் உள்ளிட்டவை இதற்கு ஏதுவான உணவுகளாகும்.
>நட்ஸ் மற்றும் உலர் திராட்சை போன்ற உணவுகளையும் கண் பார்வை குறைப்பாட்டினை தீர்ப்பதற்கு எடுத்துக்கொள்ளலாம். வேர்கடலை, பாதாம், பிஸ்ஹ்டா, வால் நட்ஸ், பூசணி விதை, சூரியகாந்தி பூக்களின் விதை உள்ளிட்டவற்றில் வைட்டமின் இ சத்துக்கள் அதிகமாக உள்ளன.
>>சிட்ரஸ் உணவுகள்: ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை உள்ளிட்ட பழங்களில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக காணப்படும். இதனால் கண் பார்வை மேம்படும். இந்த பழங்கள் மட்டுமன்றி, மிளகு, தக்காளி, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
>ஆரஞ்சு நிற உணவுகள் என கூறப்படும் உணவுகளில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கெரோட்டின் சத்துக்கள் நிறையவே உள்ளன. ஆரஞ்சு பழம், கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மாம்பழம், ஆபிரிக்காட் உள்ளிட்ட வகை உணவுகள் கண் பார்வையை மேம்படுத்த உதவும்.
>அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுள் முட்டையும் ஒன்று. இதில் வைட்டமின் ஏ, லூட்டின், ஜியாந்தின், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஜிங்க் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இது, கண் பார்வையை மட்டுமன்றி, ஒட்டுமொத்த உடல்நலனையும் மேம்படுத்த உதவும்.
மேலும் படிக்க | இருமல் நிற்கவே மாட்டேங்குதா? ‘இந்த’ வைத்தியம் செய்து பாருங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ