குறைந்த கட்டணத்தில் கேரளா செல்லலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் அறிமுகம்

IRCTC Kerala Tour Package: நீங்கள் கேரளாவை சுற்றிப் பார்க்க பிளானிங்க செய்துக் கொண்டு இருந்தால் இந்திய ரயில்வே தற்போது அற்புதமான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 7, 2024, 02:26 PM IST
  • டூர் பேக்கேஜின் சிறப்பு அம்சங்கள்.
  • இந்த டூர் பேக்கேஜில் பயணக் காப்பீட்டையும் பயணிகள் பெறுவார்கள்.
  • 3 வேளை காலை உணவுகள் வழங்கப்படும்.
குறைந்த கட்டணத்தில் கேரளா செல்லலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் அறிமுகம் title=

கேரளா டூர் பேக்கேஜ்: ஐஆர்சிடிசி சமீப காலமாக சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு டூர் பேக்கேஜ்களை கொண்டு வருகிறது. அதன்படி தற்போது இந்திய ரயில்வே ஐஆர்சிடிசி, கேரளா டூர் பேக்கேஜ் ஒன்றை அறிவித்துள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகள் மூணாறு மற்றும் ஆலப்புழா / அலப்பி போன்ற இடங்களை பார்வையிடும் வாய்ப்பை பெறுவார்கள். அதுவும் குறைந்த கட்டணத்தில்.

இந்நிலையில் இந்த டூர் பேக்கேஜ் தொடர்பாக தற்போது ஐஆர்சிடிசி தனது அதிகாரப்பூர்வ ட்வீட் கணக்கில் தகவலை வழங்கியுள்ளது, அதன்படி இந்தப் பயணமானது ஹைதராபாத்தில் இருந்து தொடங்கும், மேலும் இந்த டூர் 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது. அதுமட்டுமின்றி இந்த டூர் பேக்கேஜுக்கான கட்டணம் பயணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கேடகரி மற்றும் பயணிகளின் மொத்த எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்ககூடும். மேலும் இந்த முழு டூர் பேக்கேஜிற்கும் நீங்கள் ரூ.12,400 கட்டணமாக செலவழிக்க வேண்டும். இதனுடன் 3 வேளை காலை உணவுகள் வழங்கப்படும். இது தவிர, இந்த டூர் பேக்கேஜில் பயணக் காப்பீட்டையும் பயணிகள் பெறுவார்கள்.

மேலும் படிக்க | இவ்வளவு கம்மி விலையில் துபாய்க்கு செல்லலாமா, IRCTC அசத்தலான டூர் பேக்கேஜ்

டூர் பேக்கேஜின் சிறப்பு அம்சங்கள்:
பேக்கேஜின் பெயர் – கேரளா ஹில்ஸ் & வாட்டர்ஸ் (SHR092) - Kerala Hills & Waters (SHR092)
டெஸ்டினேஷன் கவர் - மூணாறு மற்றும் ஆலப்புழா / அலப்பி 
ஃபிரீக்வென்சி - ஒவ்வொரு செவ்வாய் கிழமையும்
சுற்றுப்பயண காலம் - 6 பகல்கள்/5 இரவுகள்
உணவு திட்டம் - காலை உணவு
பயண முறை - ரயில்
நிலையம்/புறப்படும் நேரம் - செகந்திராபாத்/பிற்பகல் 12:20 மணிக்கு.

முன்பதிவு செயல்முறை:
IRCTC அதிகாரப்பூவ இணையதளமான irctctourism.comஐப் பார்வையிடுவதன் மூலம் இந்த டூர் பேக்கேஜுக்கான முன்பதிவு நீங்கள் செய்துக் கொள்ளலாம். IRCTC சுற்றுலா வசதி மத்திய, மண்டல அலுவலகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

டூர் பேக்கேஜின் கட்டண விவரம்:
இந்த டூர் பேக்கேஜில் ஒன்று முதல் மூன்று பயணிகளுடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கான கட்டணம் ரூ.33480 ஆகும். இருவருடன் பயணித்தால் ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.19370 செலுத்த வேண்டும். மூன்று நபர்களுடன் ஷேரிங் இருந்தால் ஒரு நபருக்கு கட்டணமாக 15580 ரூபாய் செலுத்த வேண்டும். அதேசமயம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு படுக்கையுடன் கட்டணமாக 8780 ரூபாயும், படுக்கையில்லாமல் 6550 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் தர்ட் ஏசி கம்ஃபர்ட்டுக்கானது. 

இதேபோல், தர்ட் ஏசியில் 4 முதல் 6 பயணிகளுக்கான கட்டணத்தில், ட்வின் ஷேரிங்கில் ஒரு நபருக்கு ரூ.17510 கட்டணம் வசூலிக்கப்படும். மூன்று பேருடன் பயணிக்க ஒரு நபருக்கான கட்டணமாக ரூ.15110 வசூலிக்கப்படும். 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு படுக்கையுடன் ரூ.10670 கட்டணமாகும்.

Package Tariff Per Person: (1 to 3 Passengers)

Category

Single Sharing

Twin Sharing

Triple Sharing

Child With Bed

(5-11 yrs)

Child Without

Bed (5-11 yrs)

Comfort (3A)

₹ 33480/-

₹ 19370/-

₹ 15580/-

₹ 8780/-

₹ 6550/-

Standard (SL)

₹ 30770/-

₹ 16660/-

₹ 12880/-

₹ 6070/-

₹ 3840/-

 

Package Tariff Per Person: (4 to 6 Passengers)

Category

Twin Sharing

Triple Sharing

Child With Bed

(5-11 yrs)

Child Without

Bed (5-11 yrs)

Comfort (3A)

₹ 17510/-

₹ 15110/-

₹ 10670/-

₹ 8450/-

Standard (SL)

₹ 14800/-

₹ 12400/-

₹ 7970/-

₹ 5740/-

 

மேலும் படிக்க | இந்தியன் ரயில்வே விதியில் மாற்றம்.. குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள் கட்டாயம் படிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News