டெல்லியில் உள்ள பிரபல அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள விராட் கோலி மெழுகுச்சிலையின் காதுப்பகுதி சேதமடைந்ததால் சரிசெய்யும் பணி தீவிரம்!!
ரசிகர்களின் தொடர் செல்பியினால் டெல்லியில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மெழுகுச் சிலையின் காது பகுதி சேதமடைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் சாதனைகளை பாராட்டும் விதமாக, டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், அவருக்கு மெழுகுச்சிலை வைக்கப்பட்டது. கடந்த 6-ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த சிலையை அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில், விராட் கோலி சிலையின் காதுப்பகுதி உடைந்துள்ளது. அருங்காட்சியகத்தில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததே அவரது சிலையின் காதுப்பகுதி உடைய காரணம் என அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் கூட்ட நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், உடைந்த காதை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளது!!