நெருப்பை வைத்து மருத்துவம், ட்ரண்ட் ஆகும் Fire Therapy!

அழகு கலையில் ஆர்வம் கொண்டு பல விசித்திர செயல்களை மேற்கொள்வதில் நம் மக்கள் தேர்ச்சி பெற்றவர்கள்...

Last Updated : Dec 16, 2018, 07:29 PM IST
நெருப்பை வைத்து மருத்துவம், ட்ரண்ட் ஆகும் Fire Therapy! title=

அழகு கலையில் ஆர்வம் கொண்டு பல விசித்திர செயல்களை மேற்கொள்வதில் நம் மக்கள் தேர்ச்சி பெற்றவர்கள்...

இந்த வகையில் தற்போது வியாட்நாமில் நெருப்பை வைத்து உடலினை அழகு படுத்தும் புதுவித முறை பிரபலமாகி வருகிறது,. சிறிதளவு போதை வஸ்து, 30 நொடி நெருப்பு மசாஸ் என உடலை அழுகுப்படுத்துவதில் வியாட்நாம் மக்கள் தற்போது அடிமையாகி வருகின்றனர்.

Fire Therapy என்று அழைக்கப்படும் இந்த முறைக்கு, பல பயிற்சி பெற்ற கலைஞர்கள் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றனர் என உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

துண்டு அல்லது தடிமனான துணி ஒன்றினை நீரில் முக்கி நன்றாக பிழிந்து பின்னர் அழகு சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் ஆண் (அ) பெண் முகத்தில் படரவைக்க வேண்டும். பின்னர் சிறிதளவு மதுபானத்தினை அந்த துண்டின் மீது தெளிக்க வேண்டும். இனி துணியை பற்றவைக்க வேண்டியது தான். சுமார் 30 நொடிகளுக்கு நெருப்பால் துணியை முகத்தின் மீது வாட்டி, எடுத்தால் முகப்பொளிவு பெறும் என இம்மக்கள் நம்புகின்றனர். 

உள்ளூர் ஊடக செய்திகளின் படி வியாட்நம் நகரின் ஹனாய் பகுதியில் உள்ள National Hospital of Acupuncture-ல் இந்த Fire Therapy அதிகாரப்பூர்வமாக சோதிக்கப்பட்டு வருகிறது.

சிகிக்கை பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில்... தனக்கு தலைவலி, தூக்கமின்மை மற்றும் தோல் வலி போன்றவை இருந்ததாகவும், இந்த சிகிச்சைக்கு பின்னர் முழுவதுமாக நீங்கியதாகவும் தெரிவத்துள்ளார். இந்த Fire Therapy-ன் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேள்வி எழுகையில்., பயிற்சிப்பெற்ற பாரம்பரீய மருத்துவர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை அளிக்க அனுமதி தரப்படும் என National Hospital of Acupuncture தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Trending News