Vastu Tips: மரங்கள் மற்றும் செடிகளுக்கு நம் வாழ்வில் ஒரு தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு. மரங்கள் மனித வாழ்க்கையின் அடிப்படையாகும், மரங்களும் செடிகளும் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. மரங்களுக்கும் செடிகளுக்கும் வாஸ்துவில் ஒரு தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு. உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரக்கூடிய மரங்கள் மற்றும் செடிகள் தொடர்பான பல விஷயங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதே போல், சில செடிகள் மற்றும் மரங்கள் பிரச்சனையையும் தரித்திரத்தையும் (Financial Problems) கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. இன்று அந்த வகையான செடிகள் மற்றும் மரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்...
புளிய மரம்- வாஸ்து படி, புளியஞ்செடியை ஒருபோதும் வீட்டில் நடக்கூடாது. வீட்டைச் சுற்றி புளிச் செடியை வைப்பது வாஸ்து சாஸ்திரத்தில் நல்லதாக கருதப்படுவதில்லை. இது உங்கள் வாழ்க்கையில் நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மேலும், குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படலாம்.
பேரீச்சை பமரம்- பேரீச்சை மரத்தை வீட்டில் வைப்பதும் தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது. வாஸ்து படி, பேரீட்டை மரத்தை வீட்டில் வளர்த்தால் பண விரயம் ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும், இந்த வீட்டில் பணம் தங்குவதில்லை. நீங்கள் பணம் விஷயம் தொடர்பாக பல இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும்.
எளந்தை மரம்- வாஸ்து சாஸ்திரத்தின் கூற்றுப்படி, வீட்டில் எளந்தை மரம் வைப்பது மிகவும் எதிர்மறையான தாக்கத்தை தரும் என்று நம்பப்படுகிறது. இந்த மரம் உங்கள் வீட்டிற்கு வறுமையை கொண்டு வரலாம். மேலும் வீட்டில் ஏற்படும் எதிர்மறை தாக்கத்தினால், வீட்டில் பிரச்சனைகள் (Problems) அதிகரிக்கலாம்.
பால் வடியும் தாவரங்கள்- வாஸ்து சாஸ்திரத்தின் படி, பால் வடியும் செடிகளையும் மரங்களையும் ஒருபோதும் வீட்டில் வைக்கக்கூடாது. அதாவது செடியின் இலையை அல்லது கபு கிளையை ஒடித்தால் அதில் இருந்து பால் போன்ற ஒட்டும் பொருள் வெளியே வரும் வகையிலான செடிகள் அல்லது மரங்கள் வீட்டில் வைப்பது உசிதமல்ல. இந்த செடிகளை வீட்டில் வைத்தால், அது ஏற்படுத்தும் எதிர்மறை தாக்கம் வீட்டில் தரித்திரத்தையும், குழப்பமான சூழ்நிலையை உருவாக்கக் கூடும்.
ALSO READ | Vastu Tips: ஷூ தானே என நினைக்க வேண்டாம்.. இதனாலும் பாதிப்பு ஏற்படலாம்..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR