பல்வலி பெரும் தொந்தரவு தரும் வலி என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த வலி மற்றும் உணர்திறனைக் குறைக்க பெரும்பாலான மக்கள் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் சில சமையலறை பொருட்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் இயற்கையாகவே பல்வலியைக் குணப்படுத்த முடியும். வீட்டிலேயே பல்வலியை குணப்படுத்த சில பொதுவான வீட்டு வைத்தியங்கள்..இதோ.
1.உப்பு மற்றும் தண்ணீர்:
பல்வலியை குறைக்க பயன்படும் பொருட்களுள் ஒன்று, உப்பு. இதை காலங்காலமாக நமது முன்னொர்கள் வழியில் இருந்து நாம் பின்பற்றி வருகிறோம். அது மட்டுமன்றி உப்பில் கிருமிகளை அழிக்கும் திறன்கள் உள்ளது. எனவே, இதனை பயப்படாமல் பல்வலியை போக்க உபயோகிக்கலாம். இதை செய்ய, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும். வலி இருக்கும் இடத்தில் படும்படி 30 விநாடிகளுகு கொப்பளிக்க வேண்டும். பின்னர் அதை வெளியில் துப்ப வேண்டும். இப்படியே தினமும் செய்து வந்தால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் உயிரிழக்கும்.
2.மிளகு கீரை டீ:
மிளகுக்கீரை அல்லது புதினா இலைகளை வைத்து செய்த டீயை தினமும் பருகுவது பல் வலியை போக்கும். இது, ஈறு மற்றும் பல்லில் ஏற்படும் வலியை போக்க உதவும். இதை மவுத் வாஷ் ஆகவும் உபயோகிக்கலாம். இதனால் பல்வலி நீங்கி வாய் துர்நாற்றம் போகும்.
மேலும் படிக்க | ரயில்வே வழங்கிய சிறப்பு வசதி.. மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. உடனே படிக்கவும்
3.கிராம்பு எண்ணெய்:
ஒரு பஞ்சு பந்தில் சிறிதளவு கிராம்பு எண்ணெயை நனைத்து அத வலி ஏற்படும் இடத்தில் வைக்கவும். அதை, பாதிக்கப்பட்ட பகுதியில் 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். கிராம்பு எண்ணெயில் இயற்கையான வலி நிவாரணி பண்புகள் உள்ளன, அவை வலியைக் குறைக்கவும், மருத்துப்போகவும் உதவும்.
4.மஞ்சள் பேஸ்ட்:
இந்த பேஸ்டை தயாரிக்க, மஞ்சள் பொடியை தண்ணீருடன் கலக்க வேண்டும். அப்படி உருவாக்கிய இந்த பேஸ்டை பாதிக்கப்பட்ட பகுதியில் அப்படியே நேரடியாக பயன்படுத்துங்கள். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன, இது வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும், வாயை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.
5.அதிக பல்வலியின் போது..
இவை அனைத்தையும் செய்த பிறகும் பற்களில் முன்பு போலவே வலிகள் அதிகரித்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. தொடர்ந்து அல்லது கடுமையான பல் வலி ஏற்பட்டால், சரியான சிகிச்சைக்கு பல் மருத்துவரைப் பார்ப்பது முக்கியம். இருப்பினும், லேசான அசௌகரியம் அல்லது பல் வலிக்கு, இந்த வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவது வலியைப் போக்க உதவும்.
மேலும் படிக்க | தொள தொள தொப்பை.. மளமளன்னு குறையணுமா? அப்போ இந்த மேஜிக் விதைகளை சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ