Aadhaar-PAN link: உடனடியாக இதைச் செய்யாவிட்டால் உங்க பான் கார்டு காலாவதியாகிவிடும்

Aadhaar-PAN Card Linking Deadline: ஆதார்-பான் கார்டு இணைக்கும் காலக்கெடு விரைவில் முடிவடைகிறது: மார்ச் 31க்கு முன் ஆட்டையுடன், பான் எண்ணை இணைக்காவிட்டால் அது உங்களுக்கு பல பிரச்சனைகளைத் தரும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 9, 2023, 03:46 PM IST
  • ஆதார்-பான் கார்டு இணைக்கும் காலக்கெடு விரைவில் முடிவடைகிறது
  • புதிய நிதியாண்டில் இருந்து உங்கள் பான் எண் செயல்பட வேண்டுமா?
  • உடனடியாக ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கவும்
Aadhaar-PAN link: உடனடியாக இதைச் செய்யாவிட்டால் உங்க பான் கார்டு காலாவதியாகிவிடும் title=

புதுடெல்லி: ஆதார்-பான் கார்டு இணைக்கும் காலக்கெடு விரைவில் முடிவடைகிறது: மார்ச் 31க்கு முன் ஆட்டையுடன், பான் எண்ணை இணைக்காவிட்டால் அது உங்களுக்கு பல பிரச்சனைகளைத் தரும். இந்த நிதியாண்டியின் இறுதிக்குள், பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கத் தவறினால், பான் கார்டு செல்லாததாகிவிடும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

பான் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை கடந்த சில மாதங்களாக வருமான வரி நிர்வாகம் நீட்டித்துள்ளது. தேவையான ஆவணங்கள் மார்ச் 31, 2023க்குள் இணைக்கப்பட வேண்டும்.

மார்ச் 31, 2023க்குள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கத் தவறினால், பான் கார்டு வைத்திருப்பவர்களின் எண் செல்லாததாகிவிடும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. அத்தகைய அறிவிப்பு 1 ஏப்ரல் 2022 மற்றும் 30 ஜூன் 2022 காலகட்டத்திற்குள் வெளியிடப்பட்டிருந்தால், ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கத் தவறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித் துறை அறிவித்தது.

மேலும் படிக்க | PAN Aadhar Link: இவர்களெல்லாம் பான் கார்டு ஆதாருடன் இணைக்க தேவையில்லை...!

அபராதம் செலுத்தி உங்கள் பான் அட்டையை செல்ல வைக்க வேண்டிய அவசியம் என்ன? குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே, ஆதார் அட்டை மற்றும் பான் கார்டை இணைத்துவிடுங்கள். மார்ச் 31 வரை அதற்கு உங்களுக்கு நேரம் உள்ளது.

பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டியதன் அவசியம் என்ன?

உங்கள் நிரந்தரக் கணக்கு எண்ணையும் (PAN) ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, பான்-ஆதார் இணைப்பானது முக்கியமானது.

“தயவுசெய்து தாமதிக்காதீர்கள், இன்றே இணைக்கவும்! I-T சட்டத்தின்படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து PAN- வைத்திருப்பவர்களும், மார்ச் 31, 2023க்கு முன், தங்களது நிரந்தரக் கணக்கு எண்களை (PAN) ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். ஏப்ரல் 1, 2023 முதல், இணைக்கப்படாத பான் எண் செயலிழந்து போகும்" என்று ட்விட்டரில் ஐ-டி துறை வெளியிட்ட பொது அறிவுறுத்தல் கூறுகிறது.

மேலும் படிக்க | ஆதார்-பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?

பான் எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்
பான்-ஆதாரை இணைக்கத் தவறினால் என்ன நடக்கும்?

பான் கார்டு செயல்படாது

பான் எண் இல்லாமல், ஐடிஆர் தாக்கல் செய்ய முடியாது

நிலுவையில் உள்ள வருமானங்களைப் பெற முடியாது

 நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது

அதிக வரி செலுத்த வேண்டும்

மேலும் படிக்க | Jackpot! லட்சங்களை அள்ளித் தரும் ‘ஒரு ரூபாய்’ நோட்டு உங்க கிட்டே இருக்கா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News