UPI Payment Reward Scam: இன்றைய தொழில்நுட்ப காலத்தில், அரசாங்கம் டிஜிட்டல் கட்டணத்தை ஊக்குவிக்கிறது. பயனர்களை ஈர்க்கும் விதத்தில் பல்வேறு டிஜிட்டல் பேமெண்ட் முறைகளிலும் கேஷ்பேக் போன்ற வெகுமதிகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள், உங்கள் கணக்கில் உள்ள பணத்தை காலி செய்யலாம்.
UPI பேமெண்ட் ஆப்ஸில், பணம் செலுத்திய பிறகு ரிவார்டு அல்லது ஸ்கிராட்ச் கார்டு கூப்பனைப் பார்க்கிறோம். ஆனால் சைபர் கிரைம் உலகில், இந்தக் கூப்பன் அல்லது ரிவார்டு மூலமாக பண மோசடிகள் நடைபெறுகின்றன. இதில் கவனமாக இல்லாவிட்டால் சிக்கலை சந்திக்க நேரிடும்.
எனவே உங்கள் UPI ஆப்ஸ் பின் அல்லது ஏதேனும் OTP கேட்கும் கேஷ்பேக்கை தவிர்ப்பது நல்லது. UPI பேமெண்ட் ஆப்ஸ் நம் அனைவருக்கும் பணத்தை மாற்றுவதை மிகவும் எளிதாக்கியுள்ளது.
NPCI தரவுகளின்படி, ஜூன் 2022 இல், UPI பேமெண்ட் எண்ணிக்கை 10 லட்சம் கோடியைத் தாண்டியது. இது மோசடிக்காரர்களை மேலும் ஈர்க்கும் என்பதால் கவனம் அதிகம் தேவை.
மேலும் படிக்க | Google Pay, PhonePe பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை! UPI-ல் நடக்கும் மோசடி!
இப்படித்தான் மோசடி நடக்கிறது
வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் UPI மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்கள் பயனுள்ளதாக இருக்கும்.
கேஷ்பேக் காரணமாக கணக்கு காலியாகிவிடும்
பேமெண்ட் செயலியின் சில ஃபைல் ஹேக்கர்கள் ஹேக்கிங் மூலம் கேஷ்பேக் அறிவிப்பை உங்களுக்கு அனுப்புகிறார்கள். ஆன்லைன் பண பரிமாற்றத்தின் கருப்புப் பக்கமாக இது இருக்கிறது.
செயலியில் இந்த அறிவிப்பு வருவதால், இதை மோசடி என்று நம்பாமல் அதை கிளிக் செய்வதன் மூலம் ஹேக்கர் உங்களிடமிருந்து உங்கள் PIN அல்லது OTP ஐ எடுத்துக்கொள்கிறார், மேலும் கேஷ்பேக் கொடுப்பதற்குப் பதிலாக, அவர் உங்கள் பணத்தை சுரண்டி விடுகிறார்.
மேலும் படிக்க | யுபிஐ மூலம் ஏடிஎம்-லிருந்து பணம் எடுக்கலாம், கார்ட் கூட தேவையில்லை
எனவே, UPI பின்னை யாருடனும் பகிரக்கூடாது. குறிப்பாக அரசு அல்லது வங்கி அதிகாரிகள் என்று சொல்லி, வங்கிக் கணக்கிற்கான தகவல்களை கேட்டு வரும் தொலைபேசி அழைப்புகளிடம் கவனமாக இருக்கவும்.
பாதுகாப்பாக இருக்க, தொடர்ந்து UPI பின்னை மாற்ற வேண்டும். உங்கள் UPI பின்னை குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றவும்.
மொபைல் செயலியைப் பயன்படுத்தி தினசரி UPI பரிவர்த்தனை வரம்புகளை செய்வது நல்லது. கணக்கு ஹேக் செய்யப்பட்டாலும், மோசடி செய்பவர்கள் உங்கள் கணக்கில் இருந்து எல்லாப் பணத்தையும் எடுக்க முடியாது. எனவே பணம் ஓஒரளவு பாதுகாப்பாக இருக்கும்.
மேலும் படிக்க | UPI பேமெண்ட் மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ