ஓட்டுநர்களை வசைபாடினால் UBER சேவை கிடையாது என உபெர் நிறுவனம் அதிரடியாக தெரிவித்துள்ளது!
ஓட்டுநர்களை தரக்குறைவாகத் பேசும் வாடிக்கையாளர்கள், தமது சேவையிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என உபெர் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
கால் டாக்சிகளில் பயணம் செய்யும் சிலர், சிலநேரங்களில் வாகன ஓட்டுநர்களை தரக்குறைவாகத் பேசுவதாகவும், இதனால் ஓட்டுநர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் பரவலாக புகார் இருந்துவருகிறது. இந்நிலையில், உபெர் நிறுவனம், தமது ஓட்டுநர்களை தரக்குறைவாகத் பேசும் வாடிக்கையாளர்களின் சேவை உடனடியாகத் துண்டிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் ஓட்டுனர்களை தரக்குறைவாக பேசும் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனில் உபெர் செயலியை பயன்படுத்த முடியாத வகையில் ப்ளாக் செய்யப்படும் எனவும் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தத் தகவலை உபெர் நிறுவனத்தின் இந்தியத் தலைமை அதிகாரி ப்ரப்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி பிரப்ஜீத் சிங், ஏராளமான வாடிக்கையாளர்கள் UBER கார் ஓட்டுனர்களை திட்டுவதாகவும், அலைக்கழிப்பதாகவும் புகார் வந்துள்ளதாக குறிப்பிட்டார். சில வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டால், அவர்கள் UBER கார் சேவை செயலியில் ப்ளாக் செய்யப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.